பாரா­ளு­மன்றத் தேர்தல் நிறை­வ­டையும் வரையில் நான் ஊமை­யாகவே இருக்க விரும்­பு­கிறேன் என வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் தெரிவித்தார்.

யாழ்.பிரம்­ம­கு­மா­ரிகள் சபையின் புதிய கட்­டிடம் ஒன்றை திறந்து வைக்கும் நிகழ்­வில் நேற்றைய தினம் கலந்­து­கொண்டு உரை­யாற்­றிய பின்னர் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

ஊட­க­வி­ய­லா­ளர்கள் சிலர் தேர்தல் தொடர்பில் முதலமைச்சரிடம் கேள்­விகள் தொடுக்க முற்­பட்­ட­போது நான் பேச­வில்லை. தேர்தல் முடி­யும்­வ­ரையில் நான் ஊமை­யாக இருக்­கவே விரும்­பு­கிறேன் என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும் நான் பேசி இணை­யங்­களில் வெளி­யான வீடியோ தொடர்பில் நிச்சயமாக பின்னர் பதில் கொடுப்பேன் என்றார்.

Share.
Leave A Reply

Exit mobile version