யாழ். வரலாற்றுச் சிறப்புமிக்க கீரிமலையில் இன்று ஆடி அமாவாசையையொட்டி பல்லாயிரக்கணக்கான மக்கள் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் விரதமிருந்து தமது தந்தையர்களுக்குப் பிதிர்க்கடன் நிறைவேற்றி வருகிறார்கள்.

article_1439551473-jjm
கீரிமலைக் கேணியிலும், கடலிலும் நீராடித் தமது இறந்த உறவுகளை நினைத்து பிதிர்க்கடன் நிறைவேற்றினர். இம்முறை என்றுமில்லாதவாறு புலம்பெயர் உறவுகளும் ,உள்ளுர்ப் பொதுமக்களும் அதிகளவாக திரண்டு தமது உறவுகளுக்கு பிதிர்க் கடன் நிறைவேற்றி வருகின்றனர்.


கடலில் கடற்படையினரும், வெளியில் காங்கேசன்துறைப் பொலிஸாரும், சாரணர் சென்ஜோன்ஸ் அம்புலன்ஸ் இயக்கங்களும், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.


பிதிர்க் கடன் நிறைவேற்ற வரும் பக்தர்களின் நன்மை கருதி இலங்கை போக்குவரத்துச் சபையின் பஸ்கள் விசேட போக்குவரத்துச் சேவையில் ஈடுபட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version