“தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அனைத்து தமிழ் மக்களும் வாக்களிக்க வேண்டும்” வேட்பாளர் சித்தார்த்தன் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் கூட்டத்தில் அனந்தி சசிதரன் உரை..!!
மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் அவர்கள் இங்கு உரையாற்றும் போது, தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஒட்டுமொத்த தமிழ் மக்களும் வாக்களித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பை அமோகமாக வெற்றியடையச் செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.
இதேவேளை, சில இணையதளங்களில் (லங்காஸ்ரீ, “ஜே.வி.பிநியூஸ்) சித்தார்த்தன் போன்றவர்களுக்கு வாக்களிக்க வேண்டாமென்று அனந்தி சசிதரன் கேட்டுக் கொண்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன.ஆயினும், இந்தியாவிற்கு சென்றிருந்த அனந்தி சசிதரன் இரு தினங்களுக்கு முன்னரே இலங்கை திரும்பியிருந்தார்.
இலங்கை திரும்பியதும் மேற்படி செய்தியை அறிந்து அதற்குப் மறுப்புத் தெரிவிக்கும் முகமாக புன்னாலைக்கட்டுவனில் சித்தார்த்தன் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து நேற்று நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு தமிழ் தேசியத்தை வலியுறுத்திப் பேசியதோடு, தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அனைத்து தமிழ் மக்களும் வாக்களிக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.