தாய்லாந்து நாட்டில் தொன்மையான புத்த கோவிலின் முன் அரைகுறை ஆடையணிந்து நடனம் ஆடிய பெண்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தாய்லாந்து நாட்டில் உள்ள அயுத்தயா மாகாணத்தில் புகழ் பெற்ற வாட் சாய்வாத்தனாராம் கோவில் உள்ளது.
புத்த கோவிலான இது உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
ஏராளமான சுற்றுலா பயணிகள் இந்த கோவிலை சுற்றிப்பார்க்க வந்துசெல்கின்றனர்.
இந்நிலையில் நடனமாடிய பெண்களின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களை பொலிசார் தேடி வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.