மஸ்கெலியா – மவுஸ்ஸாக்கலை நீர்தேக்கத்தில் நீராடச் சென்ற இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக மஸ்கெலியா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இன்று முற்பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஸ்கெலியா குயின்ஸ்லன் தோட்டத்தில் வசிக்கும் குறித்த இரண்டு இளைஞர்களும் விளையாட செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

அதன் பின் மவுஸ்ஸாக்கலை நீர்தேக்கத்தின் டெனியன் தோட்ட நீர்தேக்கப்பகுதியில் நீராட சென்ற இளைஞர்களின் ஒருவர் நீராடிக் கொண்டிருக்கும் போது திடீரென நீரிழ் மூழ்கியுள்ளார்.

இதன்போது. அவரை காப்பாற்ற முயன்றை மற்றவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

அதன் பின் சம்பவ இடத்திற்கு சென்ற பிரதேச மக்கள் இளைஞர்களை தேடும் பணியில் ஈடுப்பட்ட போது 1 மணித்தியாலயங்களின் பின் சடலத்தை நீர்தேக்கத்திலிருந்து மீட்டுள்ளனர்.

1439632300_6246799_hirunews_Maskeliya-keகுறித்த சடலங்களை பிரேத பரிசோதனைக்காக மஸ்கெலியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதேவேளை. சிலாபம் – குருணாகலை வீதியில் முக்குனுவடவன பிரதேசத்தில், வேட்பாளர் ஒருவர் பயணித்த ஜீப் வாகனமொன்றில் மோதுண்டு 3 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

சிலாபத்திலிருந்து குருணாகலை நோக்கி பயணித்த உந்துருளியை அதே திசையில் பயணித்த ஜீப் வாகனம் வேகமாக சென்று மோதியுள்ளது.

உந்துருளியில் பயணித்த 2 பெண்களும், ஒரு சிறுவனும் காயமடைந்தவர்களில் உள்ளடங்குகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version