ஏ-9 வீதியில் கொடிகாமம், பூநகரியில் வானொன்று மதிலில் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் பலியானதுடன் மேலும் ஐந்துபேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ஹயஸ் வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி மதிலுடன் மோதுண்டதாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
சம்பவத்தில் காயமடைந்தவர்கள் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.