இந்தோனேஷியாவில் 54 பேருடன் பயணித்த உள்ளூர் பயணிகள் விமானம் ஒன்று மலைப் பிரதேசம் ஒன்றில் தரையிறங்க வேண்டிய இடத்துக்கு அருகே, காட்டுப் பகுதியில் விழுந்து நொறுங்கியுள்ளதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
கிழக்கே பப்புவா பிராந்தியத்தில் உள்ள ஒக்ஸிபிலி மாவட்டத்தில் தரையிறங்க வேண்டிய இடத்தை நெருங்கியபோது, குறித்த விமானம் மோசமான காலநிலையால் விமானபோக்குவரத்து க்ட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை இழந்துள்ளது.