சவூதி அரேபியாவில் இன்று மூன்று இலங்கையர்களுக்கு சிரச்சேதம் செய்யப்பட்டு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் உள்துறை அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.

சவூதி அரேபியாவைச் சேர்ந்த ஒருவரைக் கொலை செய்து கொள்ளையடித்த குற்றத்துக்காகவே இலங்கையர்களுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

வீடு ஒன்றை உடைத்து நுழைந்த இவர்கள், அங்கிருந்தவரைத் தலையில் அடித்துக் கொலை செய்ததாகவும், அங்கிருந்த பணத்தைக் கொள்ளையிட்டதாகவும், சவூதி அரேபிய உள்துறை அமைச்சு தெரிவித்துள்ள்ளது.

இவர்கள் மூவருக்கும், செங்கடல் நகரான ஜெட்டாவில் வைத்து சிரச்சேதம் செய்யப்பட்டு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version