அமெரிக்காவில் திடீரென ஆயிரக்கணக்கான பூச்சிகள் ஒன்று சேர்ந்து ரஷ்ய அதிபர் புதின் போல் தோன்றி காட்சி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க தலைநகர் நியூயோர்க் பகுதியில் ஆயிரக்கணக்கான பூச்சிகள் வானில் பறந்தபடி இருந்தன.அந்த காட்சியை செரீல் கில்பெர்ட் என்ற பெண்மணி வீடியோ எடுத்துள்ளார்.

அப்போது அந்த பூச்சிகள் அனைத்தும் சேர்ந்து ஒரு மனித முகம் போல் தோன்றிய காட்சியை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

putinnபின்னர் அந்த காட்சிகளை சமூக வலைதளத்தில் பதிவேற்றினார். அதனை பார்த்த சிலர் அந்த முகம் ஸ்டீவ் ஜாப்ஸ் போன்றும் ரொபின் வில்லியம்ஸ் போன்றும் தோன்றுவதாக கூறினர்.

எனினும் பெரும்பாலானோர் அது ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினின் முக அமைப்பை போல் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் ரஷ்யர் ஒருவர் இது அமெரிக்காவுக்கான எச்சரிக்கை, எனவே ரஷ்யாவுடன் சண்டை போடுவதை அமெரிக்கா நிறுத்த வேண்டும் என்று நகைச்சுவையாக தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version