யாழ். மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 5 ஆசனங்களையும், ஈபிடிபி மற்றும் ஐதேக ஆகிய கட்சிகள் தலா ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் திணைக்களத்தினால் சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின் படி யாழ் மாவட்டத்தில் கட்சிகள் பெற்ற வாக்குகள் மற்றும் ஆசனங்களின் விபரம் வருமாறு-
யாழ். மாவட்ட இறுதி முடிவு
இலங்கைத் தமிழரசுக் கட்சி – 207,577 – 69.12% – 5ஆசனங்கள்
ஈபிடிபி – 30,232 – 10.07% – 1ஆசனம்
ஐதேக – 20,025 – 6.67% – 1 ஆசனம்
ஐ.ம.சு.மு – 17,309 – 5.76%
தமிழ் காங்கிரஸ்- 15,022 – 5.00%
சுயேச்சைக்குழு 4 (ஜனநாயக போராளிகள்)- 1,979 -0.66%
அளிக்கப்பட்ட வாக்குகள் -325,805 – 61.56%
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்- 25,496 – 7.83%
செல்லுபடியான வாக்குகள் – 300,309- 92.17%