யாழ்ப்பாணத் தேர்தல் தொகுதியில் வட்டுக்கோட்டைத் தொகுதிக்கான வாக்குகளை மீள எண்ணும் நடவடிக்கைகள் இடம்பெறவேண்டும் எனக்கோரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நீதிமன்றம் செல்லவுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி 6 வாக்குகளால் ஒரு ஆசனத்தைப் பெற்றுள்ளதாகவும் அந்த ஆசனம் தமக்கு வரவேண்டிய ஆசனம் எனவும், வட்டுக்கோட்டை தொகுதி முடிவின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆசனம் சென்றுள்ளதாகவும் அதனை மீளவும் எண்ணுமாறு உதவித் தேர்தல் ஆணையாளரிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கோரியிருந்தனர்.

இதனை உதவித் தேர்தல் ஆணையாளர் மறுத்திருந்த நிலையில், வட்டுக்கோட்டைத் தொகுதிக்கான வாக்குகளை மீள எண்ண வேண்டும் எனக் கோரி நீதிமன்ற உதவியை நாடவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.

Share.
Leave A Reply

Exit mobile version