திருகோணமலை மாவட்ட விருப்பு வாக்குகளுக்கு அமைய ஐக்கிய தேசிய கட்சியின் ஏ.எம்.எம் மஹரூப் 35 ஆயிரத்து 456 வாக்குகளை பெற்று முதலாம் இடத்தில் உள்ளார்.

32 ஆயிரத்து 582 வாக்குகளை பெற்ற இம்ரான் மஹரூப் இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டார்.

இலங்கை தமிழரசு கட்சியின் சார்பில் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்ட இரா.சம்பந்தன் 33 ஆயிரத்து 804 வாக்குகளை பெற்றுக்கொண்டார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் சுசந்த புஞ்சி நிலமே அதிக்கூடிய வாக்குகளை பெற்றுக்கொண்டார்.
அவர், 19 ஆயிரத்து 953 வாக்குகளை பெற்றுக்கொண்டார்.

எட்டாவது நாடாளுமன்ற தேர்தல் வாக்களிப்புக்கான பெறுபேறுகள் தற்சமயம் வெளிவந்தவண்ணம் உள்ளன.

1439893127_7607629_hirunews_TNAAAஅந்த வகையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் மொத்த பெறுபேறுகள் தற்போதைய நிலையில் வெளிவந்துள்ளன.

அதன்படி, இலங்கை தமிழரசு கட்சி 2 லட்சத்து 7 ஆயிரத்து 577 வாக்குகளைப் பெற்று 5 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி 30 ஆயிரத்து 232 வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தை கைப்பற்றியுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி 20 ஆயிரத்து 25 வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தை கைப்பற்றியுள்ளது.

யாழ் மாவட்டத்தில் வேட்பாளர்கள் பெற்ற விருப்பு வாக்குகள் வருமாறு:

இலங்கை தமிழரசுக் கட்சி 

1.எஸ். ஸ்ரீதரன் 72,158
2. மாவை. சேனாதிராஜா 58,782
3. எம்.சுமந்திரன் 58,043
4. சித்தார்த்தன் 53,743
5.ஈ.சரவணபவன் 43,719

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி 

1. டக்களஸ் தேவானந்தா 16,399

ஐ.தே.க

1. விஜயகலா மஹேஸ்வரன் 13,071

பதுளையில் ஹரினுக்கு அதிக விருப்பு வாக்குகள்

பதுளை மாவட்டத்திற்கான விருப்பு வாக்குகள் வெளியாகியுள்ளன.

இதற்கமைய, ஐக்கிய தேசிய கட்சியின் ஹரின் பெர்னாட்டோ மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.
அவர் 2 லட்சத்து 806 வாக்குகளை பெற்றுள்ளார்.

ரவீந்த சமரவீர  85 ஆயிரத்து 507 வாக்குகளை பெற்று இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.

58 ஆயிரத்து  291 வாக்குகளை பெற்ற சமிந்த விஜயசிறி மூன்றாம் இடத்தை பெற்றுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஏ.அரவிந்குமார் 53 ஆயிரத்து 741 வாக்குகளையும், வடிவேல் சுரேஸ் 52 ஆயிரத்து 378 வாக்குகளையும் பெற்று வெற்றிப்பெற்றுள்ளனர்.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பாக நிமல் சிறிபாலடி சில்வா ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 406 வாக்குகளை பெற்றுக்கொண்டார்.

ஷாமர சம்பந்த தசநாயக்க 64 ஆயிரத்து 418 வாக்குகளையும், தேனுக விதான கமனே 43 ஆயிரத்து 517 வாக்குகளையும் பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர்.

நாமலுக்கு விருப்பு வாக்குகளை வாரி வழங்கிய அம்பாந்தோட்டை மக்கள்

இம் முறை பொதுத் தேர்தலில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி வெற்றிபெற்றுள்ளது.

இம்மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளை  ஐ.ம.சு.கூட்டணியில் போட்டியிட்டவரும் , முன்னாள் ஜனாதிபதியின் மகனுமான  நாமல் ராஜபக்ஷ பெற்றுள்ளார்.

அவர்  127,201 வாக்குகளை பெற்றுள்ளார். அதே கட்சியில் இரண்டாவது இடத்தை மஹிந்த அமரவீர பெற்றுள்ளார்.  அவர் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 84,516 .

மேலும் மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரனான சமல் ராஜபக்ஷ 80621 வாக்குகளை பெற்று 3 ஆவது  இடத்தையும், டி.வீ. சானக 51,319 வாக்குகளையும் பெற்று பாராளுமன்றத்துக்கு தெரிய்வாகியுள்ளனர்.

இதேவேளை அம் மாவட்டத்தில் ஐ.தே.க சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாஸ 112, 645 வாக்குகளையும்,திலீப் வெதாராச்சி 65,391 வாக்குகளையும் பெற்று வெற்றியீட்டுள்ளார்.

ஜே.வி.பி. வேட்பாளர் நிஹால் கலப்பத்தி 12,162 விருப்பு வாக்குகளை பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

Share.
Leave A Reply

Exit mobile version