வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தன் ஆலயத்தின் வருடாடந்த மகோட்சவம் இன்று காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.</p>
காலை 10 மணியளவில் நடைபெற்ற விசேட பூஜைகளுடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ ஆலயத்தின் பிரதமகுரு கொடியினை ஏற்றிவைத்திருந்தார்.
தொடர்ந்து இடம்பெற்ற பூஜை வழிபாடுகளை தொடர்ந்து முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை சகிதம் உள்வீதி வலம் வந்து அடியவர்களுக்கு அருள்பாலித்தார்.தொடர்ந்து 25 நாட்டகள் மகோட்சவத் திருவிழா நடைபெறவுள்ளது.
இறுதி 24, 25 ஆம் நாட்கள் முறையே தேர், தீர்த்தத் திருவிழாக்கள் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.இவ் திருவிழாவில் நாட்டின் பல பாகங்களிலும் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டிருந்தார்கள்.