மதுரை: இன்று காலை மீனாட்சி அம்மன் கோயிலில் குள்ளமான பட்டதாரி மணமக்களுக்கு திருமணம் நடந்தது. இருமனங்களும் இணையதளம் மூலம் இணைந்தது.

மதுரை, புதூர் மண்மலை மேட்டை சேர்ந்தவர் மருதுமுருகேசன். தமிழ் நாடு உணவு பொருள் வழங்கல் துறையில் கண்காணிப்பாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

இவரது மனைவி ஜானகி. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். மூன்றாவதாக பிறந்தவர் ஸ்ரீராம்ஜி(27). இவரது உயரம் இரண்டரை அடி. பிபிஏ பட்டதாரியான இவர் மதுரையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இவர் இணையதளம் மூலமாக தனது உயரத்திற்கு ஏற்றவாறு தோற்றமுடைய பெண்ணை தேடி வந்தார்.

மஹாராஷ்டிரா மாநிலம், தானே மாவட்டம் அம்பர்நாந் பகுதியை சேர்ந்த துளசிதாஸ் – சசிகலா தம்பதியின் மகள் யோகிதா(27). இவர் 3 அடி உயரம் கொண்டவர். பிஏ பட்டதாரியான இவரை ஸ்ரீராம்ஜி இணையதளம் மூலமாக தேர்வு செய்தார்.

இதை தொடர்ந்து இருவரது குடும்பமும் சந்தித்து பேசி, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்றிரவு புதூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது.

இன்று காலை மணமக்களுக்கு மீனாட்சி அம்மன் கோயிலில் திருமணம் நடந்தது. இரு வீட்டு உறவினர்களும் மணமக்களை வாழ்த்தினர்.

இது குறித்து மணமகனின் தந்தை மருதுமுருகேசன் கூறுகையில், ‘இணையதளம் மூலம் இருவரும் இணைந்துள்ளனர். பெண் வீட்டாரிடம் எந்த வரதட்சணையும் பெறவில்லை’ என்றார்.

Share.
Leave A Reply

Exit mobile version