சென்னை: நடிகர் சாந்தனு- கீர்த்தி திருமணம் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கேரளா ஹவுசில் கோலாகலமாக நடைபெற்றது. நடிகர் விஜய், இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
திரைப்பட இயக்குனர்- நடிகர் பாக்கியராஜ்- பூர்ணிமா தம்பதியின் மகன் சாந்தனு. இவர் சக்கரைகட்டி, அம்மாவின் கைபேசி உள்பட பல படங்களில் நடித்துள்ளார். இவருக்கும் டி.வி. தொகுப்பாளினி கீர்த்திக்கும் 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நடன இயக்குனர் ஜெயந்தியின் மகள்தான் கீர்த்தி. இவர் கலைஞர் டிவியில் மானாட மயிலாட நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.