ilakkiyainfo

கிளிநொச்சியில் ஒருவரை கடத்திச் சென்ற குற்றச்சாட்டின் பேரில் 9 பேர் கைது. (படங்கள் இணைப்பு)

கிளிநொச்சியில் நபர் ஒருவரை கடத்திய குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட 9 பேரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஏ 32 பாதை வழியாக பூநகரியில் இருந்து மன்னார் நோக்கி சென்ற டிபென்டர் ரக வாகனம் ஒன்று சோதனைக்குட்படுத்தப்பட்ட போது குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கடத்தப்பட்டவர், சந்தேக நபர்கள் பயணித்த வாகனத்தில் இருந்து மீட்கப்பட்டுள்துடன் சம்பவம் தொடர்பாக அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.   எவ்வாறாயினும் கடத்தப்பட்ட நபர், கேரளா கஞ்சா தருவதாக கூறி மூன்று லட்சம் ரூபாவை பெற்றுக்கொண்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

எனினும் கஞ்சாவை வழங்காத காரணத்தினால், தாம் அவரை கடத்திச் சென்றதாக சந்தேக நபர்கள் 9 பேரும் பொலிஸாரிடம் கூறியுள்ளனர்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 9 பேரும் இன்று நீதி மன்றில் ஆயர் செய்யப்பட்டனர்.விசாரணைக்குட்படுத்திய கிளிநொச்சி பொலிசார், இன்று கிளிநொச்சி நீதிமன்ற நீதிபதி எம்.ஐ வகாப்தீன் முன்னிலையில் பிற்பகல் 2 மணியளவில் ஆயர் செய்தனர்.

வழக்கினை பார்வையிட்ட நீதிபதி சந்தேக நபர்களை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

unnamed-1614

கிளிநொச்சியில் பாதசாரியை மோதிய வாகனத்தையும் சாரதியையும் பொதுமக்கள் தடுத்து வைப்பு
23-08-2015


கிளிநொச்சி ஏ09 வீதியின் நீதிமன்றின் முன்பாக உள்ள மஞ்சள் கோட்டுக்கடவையூடாக வீதியை கடக்க முற்ப்பட்ட வயோதிபர் ஒருவரை கிளிநொச்சியிலிருந்து இரணைமடு நோக்கிப் பயணித்த கார் ஒன்று குறித்த பாதசாரியை மோதிவிட்டு தப்பிச்செல்ல முற்பட்டவேளை பொதுமக்கள் குறித்த வாகனனத்தை வழிமறித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.


Exit mobile version