பரி­தா­ப­க­ர­மாக உயி­ரி­ழந்த பிர­பல றக்பி வீரர் வஸீம் தாஜூதீனின் மர­ணத்தில் மறைந்­துள்ள மர்ம­ங்கள் வெளிக்­கொ­ண­ரப்­பட்டு, குற்­ற­வா­ளிகள் யாரா­க­வி­ருந்­தாலும் அவர்­க­ளு­டைய முக­த்தி­ரைகள் கிழிக்­கப்­பட்டு நீதி நிலை நாட்­டப்­ப­டுமா….?

றக்பி வீரர் வஸீம் தாஜுதீன் ஒரு சிறந்த விளை­யாட்டு வீரர் மட்­டு­மல்ல. ஒரு சிறந்த மனித நேய­முள்ள மனிதரும் கூட. அவர் எல்­லோ­ரி­டமும் சஜ­க­மாக பழ­கு­பவர்.

தனது தாய் நாட்­டுக்­காக முன்­னின்று விளை­யாடும் ஒரு சிறந்த விளை­யாட்டு வீர­ரா­க­வி­ருந்தார். 2001 ஆம் ஆண்டு தொடக்கம் 2003 ஆம் ஆண்டு வரை கல்­கிசை புனித தோமஸ் கல்­லூ­ரியின் றக்பி குழுவில் இடம்­பெற்றிருந்த தாஜுதீன் ஹெவ்லொக் ஸ்போர்ட்ஸ் றக்பி குழுவில் இணைந்துகொண்டதுடன், தனது திற­மையின் கார­ண­மாக 2009 ஆம் ஆண்டு ஹெவ்லொக் ஸ்போர்ட்ஸ் குழுவின் தலை­வ­ராக கட­மை­யாற்றும் சந்­தர்ப்­பமும் அவ­ருக்கு கிடைத்­தது.

சிறந்த தலை­மைத்­து­வமும், குழு­வினை வழி­ந­டத்தும் ஆளு­மையும் இயல்­பா­கவே அவரிடம் இருந்­தது. தாஜு­தீனுக்கு காலில் உபா­தை­யொன்றும் ஏற்­பட்­டி­ருந்­தது. இதனால் சிறிது காலம் றக்பி விளை­யாட்­டி­லி­ருந்தும் ஒய்வு­ பெற்­றி­ருந்தார்.

அவ­ரு­டைய இழப்­பா­னது இலங்கை விளை­யாட்டு துறைக்கு ஏற்­பட்ட பேரிழப்­பாகும்”

இது பிர­பல றக்பி வீரர் வஸீம் தாஜுதீனின் மரணம் தொடர்­பாக அவ­ரது பயிற்­று­விப்­பாளர் சில ஆண்­டு­க­ளுக்கு முன் ஊட­கங்­க­ளுக்கு தெரி­வித்த கருத்­தாகும்.

இன்று அனைவர் மத்­தியிலும் கடந்த 3 வரு­டங்­க­ளுக்கு முன் பரி­தா­ப­க­ர­மாக உயி­ரி­ழந்த பிர­பல றக்பி வீரர் வஸீம் தாஜுதீன் மர­ணத்தில் மறைந்­துள்ள மர்­மங்கள் வெளிக்­கொ­ண­ரப்­பட்டு, குற்­ற­வா­ளிகள் யாரா­க­விருந்தாலும் அவர்­க­ளு­டைய முகத்தி­ரைகள் கிழிக்­கப்­பட்டு நீதி நிலை நாட்­டப்­ப­டுமா? என்ற கேள்­வியே எழுந்துள்­ளது.

showImageInStory

இந்­நி­லையில் வஸீம் தாஜுதீன் மரணம் தொடர்­பான விசா­ர­ணை­களை கொழும்பு குற்­றப்­பு­ல­னாய்வு பிரி­வினர் துரி­த­மாக முன்­னெ­டுத்து வரு­கின்­றார்கள்.

2012 ஆம் ஆண்டு மே மாதம் 16 ஆம் திகதி நார­ஹேன்­பிட்டி பிர­தே­சத்தில் சாலிகா விளை­யாட்டு மைதா­னத்தை அண்­மித்த பகு­தியில் எரிந்த நிலையில் காணப்­பட்ட கார் ஒன்­றி­லி­ருந்து தாஜுதீ­னு­டைய சட­ல­ம் மீட்­கப்­பட்­டது.

எனினும், அதி வேகத்தில் வந்த கார் வேகத்தை கட்­டுப்­ப­டுத்த முடி­யாமை கார­ண­மாக மதில் மீது மோதி­யதில் தீப் பற்றி விபத்­துக்­குள்­ளா­கி­யுள்­ள­தாக செய்­திகள் தெரி­வித்­தன.

இத­னை­ய­டுத்து சட­ல­மா­னது குடும்­பத்­த­வ­ரிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்டு தெஹி­வளை ஜும் ஆ பள்­ளி­வாசல் மைய­வா­டியில் நல்­ல­டக்கம் செய்­யப்­பட்­டது.

ஆனால், வஸீம் தாஜுதீனின் மரணம் ஒரு விபத்து அல்ல அது ஒரு கொலை­யாக இருக்­கலாம் என்று சந்­தேகம் தெரி­விக்­கப்­பட்­டது.

இத­னை ­தொ­டர்ந்து அது குறித்த வாதப்­பி­ரதி வாதங்கள் ஏற்­பட்­டன. இந்­நி­லையில் அது குறித்த விசா­ர­ணைகள் தொடர்ந்து நடை­பெற்­றன.

இறு­தி­யாக குற்­றத்­த­டுப்பு பிரி­வினர் கொழும்பு நீதி­மன்ற நீதவான் நிசாந்த பீரி­ஸுக்கு சாட்­சி­யங்­க­ளுடன் சமர்ப்பித்­தி­ருந்­ததை தொடர்ந்தே இது தொடர்­பான விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

வஸீம் தாஜுதீனின் கழுத்­துப்­ப­கு­தியில் கூரிய ஆயு­தத்­தினால் குத்­தப்­பட்டு, தட்­டை­யான ஆயுதம் ஒன்றால் அவர் தாக்­கப்­பட்டு, முது­கெ­லும்பு, பற்கள், கைகால்­களும் உடைக்­கப்­பட்­டுள்­ள­துடன், பாத­மா­னது கண்­ணா­டியை ஒத்த கூரிய ஆயு­தத்தால் கிழிக்­கப்­பட்டு எலும்­புகள் முறிக்­கப்­பட்டு பலத்த சித்­தி­ர­வ­தை­க­ளுக்­குட்­ப­டுத்­தப்­பட்டே அவர் கொலை செய்­யப்­பட்­டி­ருக்­கலாம் என்று குற்­றப்­பு­ல­னாய்வு பிரி­வினர் நீதி­மன்றில் தெரி­வித்­துள்­ளனர்.

இத­னை­ய­டுத்தே பல்­வேறு கோணங்­களில் தாஜுதீன் மரணம் தொடர்­பான விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

தாஜுதீன் 2009 ஜூலை கால்டெக்ஸ் ஒப்­சர்வர் விரு­து­களில் (Caltex Observer Rugby Awards) சிறந்த றக்பி வீரர் விருதை (“Most Popular Rugby Player”) வென்றார்.

அதன்பின் காலில் ஏற்­பட்ட உபா­தை­யொன்றின் கார­ண­மாக சிறிது காலம் றக்பி விளை­யாட்­டி­லி­ருந்தும் ஒய்­வு பெற்­றி­ருந்தார்.

அது­மட்­டு­மின்றி அமெ­ரிக்கன் எக்ஸ்­பிரஸ் சுற்­றுலாத் துறை­யிலும் சிறி­து­காலம் (Mackinnons American Express Travel) பணி­யாற்­றினார்.

2012 ஆம் ஆண்டு மே மாதம் 16 ஆம் திகதி மாலை 6 மணி­ய­ளவில் நண்பர் ஒரு­வரின் வீட்­டுக்கு விருந்­துக்­காக செல்­வ­தாக கூறிச் சென்ற தாஜுதீன் தொடர்­பாக மறுநாள் காலை சோக செய்­தி­யொன்றே அனைவர் காதுகளுக்கும் எட்­டி­யது.

வஸீம் தாஜுதீன் பய­ணித்த கார் வேகத்தை கட்­டுப்­ப­டுத்த முடி­யாமை கார­ண­மாக நார­ஹேன்­பிட்டி பிரதேசத்தில் சாலிகா விளை­யாட்டு மைதா­னத்தை அண்­மித்த பகு­தி­யி­லுள்ள மதிலில் மோதி தீப்­பற்றி விபத்துக்­குள்­ளா­கி­யதில் தாஜுதீன் உயி­ரி­ழந்து விட்­ட­தாக அறி­விக்­கப்­பட்­டது.

காரில் கண்­டெ­டுக்­கப்­பட்ட சடலம் ஆரம்­பத்தில் தனியார் நிறு­வ­ன­மொன்றில் பணி­யாற்றும் முகாமையாளருடை­யது என்றே கூறப்­பட்­டது.

எனினும், பின்­னர்தான் அது பிர­பல றக்பி வீரர் வஸீம் தாஜுதீனின் சடலம் என இனங்­கா­ணப்­பட்­டது.

இருப்­பினும், தாஜு­தீனின் மரணம் தொடர்­பாக ஆரம்­பத்தில் எந்த வித­மான விசா­ர­ணை­களும், முறை­யாக மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை.

அப்­போது இது ஒரு விபத்து கார­ண­மாக ஏற்­பட்ட மரணம் என்றே பொலிஸ் வட்­டா­ரங்களை மேற்கோள் காட்டி ஊடகங்கள் செய்­தி­களை வெளி­யிட்­டி­ருந்­தன.

ஆயினும், அதனை பலரும் ஏற்­றுக்­கொள்­ள­வில்லை. வஸீம் தாஜு­தீனின் மரணம் கொலை­யாகத் தான் இருக்கக் கூடும் என சந்­தே­கித்­தனர்.

இந்­நி­லையில் தாஜுதீ னின் மரணம் ஒரு கொலை­யாக இருக்கக் கூடும் என்­ப­தற்­கான எளி­மை­யான சில கார­ணங்கள் முன்­வைக்­கப்­பட்­டன.

அவற்றை நோக்­கு­வோ­மானால், விபத்து இடம்­பெற்­ற­தாகக் கூறப்­பட்ட பிர­தேசம் சன நட­மாட்டம் அற்ற ஒரு பிர­தே­ச­மாகும்.

தாஜுதீன் நார­ஹேன்­பிட்­டி­யா­வி­லுள்ள நண்பர் ஒரு­வரின் வீட்­டுக்கு விருந்­துக்கு செல்­வ­தாக கூறியே சென்றுள்ளார்.

விபத்து இடம்­பெற்­றதும் நார­ஹேண்­பிட்­டி­யாவில் தான். அதா­வது அந்த இடத்தை சென்­ற­டை­வ­தற்கு நீண்ட நேரம் எடுக்­காது.

அது­மட்­டு­மின்றி, வாகனம் வீதியை விட்டு விலகி மதிலில் மோதி­யுள்­ளதால் விபத்து இடம்­பெற்­றி­ருக்­கின்­றது என்று சோடித்­துக்­காட்­டி­னார்கள்.

எனவே அவ்­வாறு இருந்­தி­ருந்தால் அது மிகப்­பெ­ரிய விபத்­தாக இருந்­தி­ருக்க வேண்டும் என்­ப­துடன், மதிலில் பெரும் பகுதி இடிந்­தி­ருக்­கவும் வேண்டும். எனினும், அப்­படி பெரிய சேதம் எதுவும் மதி­லுக்கு ஏற்­பட்­டி­ருக்­க­வில்லை. சிறி­ய­தொரு சேதமே மதிலில் ஏற்­பட்­டி­ருந்­தது.

அடுத்த மிக முக்­கிய காரணம் றக்பி வீரர் வஸீம் தாஜு­தீனின் பணப்பை (Purse) கிரு­ல­ப்பனை பகு­தி­யி­லிருந்து கண்­டெ­டுக்­கப்­பட்­டது.

ஆனால், நார­ஹேன்பிட்­டிய பகு­தியில் தான் தாஜு­தீனின் கார் விபத்­துக்­குள்­ளா­கி­யது என்று கூறப்­பட்­டது. அப்­ப­டி­யி­ருக்­கையில் அவ­ரு­டைய பணப்பை (Purse) அவ­ரு­டைய காருக்­குள்­ளேயோ அல்­லது காற்­சட்டை பையிலோ இருந்­தி­ருக்க வேண்டும்.

எனினும், அவ்­வாறு இருக்­காமல் பணப்பை கிரு­லப்­பனை பகு­தியில் கிடந்­தது எப்­படி? என்று சந்­தேகம் வலு­வாக எழுந்­தி­ருந்­தது.

எனவே அது தொடர்­பாக சீ.சீ.டி.வி கெமரா பதி­வு­களைக் கொண்டு விசா­ர­ணை­களை மேற்­கொண்­டி­ருக்க முடியும். ஆயினும் அன்­றைய சூழ்­நி­லையில் விசா­ர­ணை­கள் அனைத்­துமே முடக்­கப்­பட்ட நிலை­யி­லேயே காணப்­பட்­டன.

அது­மட்­டு­மின்றி, கார் தீப்­பற்றி எரியும் போது தீயி­லி­ருந்து தன்னை காப்­பாற்­றிக்­கொள்ள தாஜுதீன் ஏன் முயற்சி செய்­ய­வில்லை? ஒரு கார் தீயினால் எரி­வ­தற்கும் அது மிகப்­ பெ­ரிய விபத்­தா­க­வி­ருக்க வேண்டும் என்­ப­துடன் கார் முழு­மை­யாக எரி­வ­தற்கும் நீண்ட நேரம் எடுத்­தி­ருக்கும்.

எனவே வஸீம் தாஜுதீன் போன்ற மிகச் சிறந்த திற­மை­யான விளை­யாட்டு வீரர் அதி­லி­ருந்து தப்பிச் செல்ல பல­வாறு முயற்­சித்­தி­ருக்க வேண்டும். எனினும் அவர் ஏன்? அதி­லி­ருந்து தப்பிச் செல்ல முயற்­சிக்­க­வில்லை?

எனவே, தாஜுதீன் சாரதி ஆச­னத்­தில் இருந்­தது தீயில் விபத்­துக்­குள்­ளாகி உயி­ரி­ழந்தாரா? அல்­லது கொலை செய்­யப்­பட்டபின் அவரது­ சட­லம் காருக்குள் போட்டு எரியூட்டப்பட்டதா? என்ற கேள்­விகள் எழுப்­பப்­பட்­டன?

சம்­பவம் இடம்­பெற்ற இரண்டு நாட்­க­ளுக்கு பின்னர் மே மாதம் 18 ஆம் திகதி கொழும்பு மாவட்ட நீதிவான் நிஷாந்த பீரிஸ் சம்­பவம் தொடர்­பாக விசா­ர­ணை­களை மேற்­கொண்டு நீதி­மன்­றத்தில் அறிக்­கை­யொன்றை சமர்­ப்பிக்க வேண்டும் என்று உத்­த­ரவு பிறப்­பித்­தி­ருந்தார்.

எனினும், அந்த அறிக்கை வெளி­வ­ரு­வ­திலும் தாமதம் ஏற்­பட்­டி­ருந்­தது. எனவே தாஜு­தீ­னு­டைய மரணம் நடைபெற்று 3 வரு­டங்கள் கழிந்த இன்­றைய நிலையில் தான் அவ­ரு­டைய மர­ணத்தில் மறைந்­துள்ள பல திகி­லூட்டும் உண்­மைகள் வெளி­வர ஆரம்­பித்­தி­ருக்­கின்­றன.

தாஜு­தீ­னு­டைய மரணம் தொடர்­பான அறிக்­கையில் வாக­னத்தில் தீ பற்­றி­யதில் அவர் உயி­ரி­ழந்­தி­ருந்தால் அவ­ரது சுவாசப்­பையில் காபன்­மொ­னொட்சைட், சாம்பல் போன்­றன கலந்­தி­ருக்க வேண்டும்.

ஆயினும், அவ­ரது சுவா­சப்­பையில் அவ்­வாறு எதுவும் கலந்­தி­ருக்­க­வில்லை.ஆகையால், கடு­மை­யான சித்­தி­ர­வ­தை­க­ளுக்கு உட்­ப­டுத்­தப்­பட்ட நிலையில் தான் தாஜுதீன் உயி­ரி­ழந்­தி­ருக்க வேண்டும் என வைத்­திய அதி­கா­ரிகள் சந்­தே­கிப்­ப­தாக தெரி­ய­வ­ரு­கின்­றது.

எனவே, இது தொடர்­பான விசா­ர­ணை­களை தற்போது பல்­வேறு ஆதா­ரங்­க­ளுடன் குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரி­வினர் முன்­னெ­டுத்து வரு­கின்­றனர்.

இந்­நி­லையில் தான் வஸீம் தாஜு­தீ­னு­டைய சட­லத்தை மீள பரி­சோ­த­னைக்­காக தோண்டி எடுப்­ப­தற்கு அனு­மதி வழங்­கு­மாறு கோரி புதுக்­கடை 3 ஆம் இலக்க நீதி­மன்ற நீதிவான் நிஸாந்த பீரி­ஸுக்கு குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் எழுத்து மூலம் அறிக்­கை­யொன்­றினை சமர்ப்­பித்திருந்தனர்.

அதற்­க­மைய புதைக்­கப்­பட்ட தாஜு­தீ­னு­டைய சடலம் மீள் பரி­சோ­த­னை­க­ளுக்­காக தெஹி­வளை ஜும் ஆ பள்­ளி­வாசல் மைய­வா­டி­யி­லி­ருந்து கடந்த 10 ஆம் திகதி தோண்­டி­யெ­டுக்­கப்­பட்டு, மேல­திக பரி­சோ­த­னை­க­ளுக்­காக கொழும்பு சட்ட வைத்­திய மற்றும் உடற்­கூற்று நிலை­யத்­துக்கு அனுப்­பப்­பட்­டுள் ­ளது.

கடந்த 10 ஆம் திகதி கடுமையான பொலிஸ் பாதுகாப் புக்கு மத்தியில் காலை 7.45 மணி­ய­ளவில் தாஜு­தீ­னு­டைய உற­வி­னர்­க­ளாலும், தெஹி­வளை ஜும் ஆ பள்­ளி­வாசல் நிர்­வா­கத்­தி­ன­ராலும் எவ்­வித சந்­தே­க­மு­மின்றி அவரது சடலம் புதைக்கப்பட்ட இடம் அடை­யாளம் காட்­டப்­பட்­டதை தொடர்ந்து சட­லத்தை தோண்டும் பணிகள் ஆரம்­பிக்­கப்­பட்­டி­ருந்­தன.

இதில் தெஹி­வளை ஜும் ஆ பள்­ளி­வாசல் நிர்­வா­கத்­தி­ன­ரி­டமும், தாஜு­தி­னு­டைய சகோ­த­ரி­யி­டமும், சகோ­த­ர­னி­டமும் வாக்­கு­மூ­லங்கள் பதிவு செய்து கொண்­டனர்.

தாஜு­தீ­னு­டைய சகோ­த­ரி­யி­டமும், சகோ­த­ர­னி­டமும் பெற்­றுக்­கொண்ட வாக்­கு­மூ­லத்தில் “தாம் தாஜு­தீ­னு­டைய சட­லத்தை அடக்கம் செய்து விட்டு வேப்பம் மரம் ஒன்­றி­னையும் வேறு சில பூச்­செ­டி­க­ளையும் நட்­ட­தா­கவும் அத­ன­டிப்­ப­டை­யி­லேயே தாஜுதீன் புதைக்­கப்­பட்ட இடத்தை தம்மால் அடை­யாளம் காட்டக் கூடி­ய­தா­க­வி­ருந்­தது என்றும் கூறி­யி­ருந்­தனர்.

எனவே குறித்த இடத்தில் ந­டப்­பட்ட வேப்­ப­மரம் 12 அடி வளர்ந்திருந்த­ நிலையில் அதை அவ்­வி­டத்­தி­லி­ருந்து அப்­பு­றப்­ப­டுத்தி சட­லத்தை தோண்டியெடுக்கும் பணியை ஆரம்­பித்­தி­ருந்­தனர்.

சடலம் புதைக்­கப்­பட்ட இடத்­தி­லி­ருந்து 3 அல்­லது 4 அடி தோண்டி செல்லும் போதே பொலித்தீன் மற்றும் வெள்ளைது­ணி­யினால் போர்த்­தப்­பட்ட நிலையில் சடலம் குழி­யி­லி­ருந்து எடுக்­கப்­பட்­டது.

அதன்பின், கொழும்பு பிர­தான சட்ட வைத்­திய அதி­காரி அஜித் தென்­னகோன் தாஜு­தீ­னு­டைய சட­லத்தை மீள் பரி­சோ­த­னை­க­ளுக்­காக பொறுப்பேற்றுக்கொண்டார்.

அது­மட்­டு­மின்றி அது தொடர்­பான வழக்கு எதிர்­வரும் செப்­டெம்பர் மாதம் 10 ஆம் திகதி நடை­பெ­ற­வுள்­ளது என்­பதும் குறிப்­பி­டத்­தக்­கது.

இத­னி­டையே இக்­கொ­லை­யுடன் தொடர்­பு­டைய பல்­வேறு விட­யங்கள் ஊட­கங்கள் வாயி­லா­கவும், சமூக வலைத்­த­ளங்கள் ஊடா­கவும் வெளிப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றன.

இக்­கொ­லை­யுடன் முன்­னைய ஆட்சி காலத்தில் பாது­காப்­புப்­பி­ரி­வினைச் சேர்ந்த சிலர் சம்­பந்­தப்­பட்­டி­ருப்­ப­தா­கவும், சமூக சேவை நிறு­வ­ன­மொன்­றினால் வழங்­கப்­பட்ட வாகனம் ஒன்று பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் தெரி­ய­வ­ரு­கின்­றது.

மேலும் இக்­கொலை காதல் விவ­காரம் ஒன்றின் கார­ண­மாக ஏற்­பட்­ட­தா­க­வி­ருக்­கலாம் என்றும் அதில் பிர­ப­ல­மான ஒரு­வரின் மக­னுக்கு தொடர்பு இருக்­கலாம் என்றும் சந்­தே­கிக்­கப்­ப­டு­கின்­றது.

எது­எவ்­வா­றா­யினும், மண்ணுள் புதைக்­கப்­பட்ட பிர­பல றக்பி வீரர் வஸீம் தாஜு­தீ­னு­டைய சடலம் மீள் பரிசோதனை­க­ளுக்­காக தோண்­டி­யெ­டுக்­கப்­பட்ட இன்­றைய நிலையில் அவ­ரு­டைய மரணம் தொடர்­பான விசா­ரணைகள் எவ்­வித பக்­க­ச்சார்பும் இன்றி மேற்­கொள்­ளப்­ப­டு­வ­துடன், குற்றவாளிகள் யாராகவிருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டனைக்குட்படுத்தப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மனதில் நிறைந்து போயுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version