பெய்ரூட்: பலாத்காரம் செய்தால் இறவைனுக்கு நெருக்கம் ஆகலாம் என்று ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதி ஒருவர் 12 வயது சிறுமியிடம் தெரிவித்துள்ளார்.
ஈராக் மற்றும் சிரியாவில் அட்டகாசம் செய்து வரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் யசிதி இன பெண்கள், சிறுமிகளை கடத்தி செக்ஸ் அடிமைகளாக வைத்துள்ளனர்.
மேலும் அவர்களை செக்ஸ் அடிமை சந்தைகளில் விற்பனை செய்கிறார்கள். அமைப்பில் சேர்ந்தால் பெண்களுடன் உல்லாசமாக இருக்கலாம் என்று கூறி இளைஞர்களை கவர்கிறார்கள்.
பெண்கள்
செக்ஸ் அடிமைகளாக வைக்கப்படும் பெண்களை தங்க வைக்க இடங்கள், அவர்களை நிர்வாணமாக நிற்க வைத்து கன்னித்தன்மையை ஆய்வு செய்யும் அறைகள், அடிமை சந்தைக்கு அழைத்துச் செல்ல பேருந்துகள் வைத்துள்ளனர் தீவிரவாதிகள் என நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
சிறுமி
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 12 வயது சிறுமியை தீவிரவாதி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். தீவிரவாதிகளின் பிடியில் இருந்து தப்பித்த சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமைகள் பற்றி தெரிவித்துள்ளார்.
பலாத்காரம்
தீவீரவாதி ஒருவர் என்னிடம் வந்து என் வாயில் துணியை வைத்து திணித்தார். நான் ஒரு நாத்திகவாதி என்றும், அதனால் என்னை பலாத்காரம் செய்வது அனுமதிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் என்னிடம் தெரிவித்தார் என்றார் சிறுமி.