சவூதி அரே­பிய மன்னர் சல்மான் அண்­மையில் பிரான்ஸின் தென்­ப­கு­திக்கு விஜயம் மேற்­கொண்டார். உலகின் மிகவும் ஆடம்­ப­ர­மான மிகச்­சி­றந்த விடு­முறை தலத்­துக்கு தான் அவர் விஜயம் செய்தார்.

2015 ஜுலை 25இல் மூன்­று­வார கால ஆடம்­பர விடு­மு­றை­யாக இது தொடங்­கி­யது. இவர் தனது பரிவாரங்களுடன் நைஸ் சர்­வ­தேச விமான நிலை­யத்தில் இரண்டு ஆடம்­பர விமா­னங்­களில் வந்து சேர்ந்தார்.

உற­வி­னர்கள், நண்­பர்கள், அடி­வ­ரு­டிகள், கூலிப்­ப­டை­யினர் என சுமார் ஆயிரம் பேர் இதில் அடங்­குவர். இவர்களுள் பலர் ஒரு வார காலத்­தி­லேயே தமது விடு­முறைத் திட்­டத்தை கைவிட்டு விட்டு 2015 ஆகஸ்ட் 2 ஞாயிற்­றுக்­கி­ழமை தென் பிரான்­ஸி­லி­ருந்து வெளி­யேற வேண்­டி­ய­தா­யிற்று.

காரணம் மன்னர் தங்­கி­யி­ருந்த ஆடம்­பர மாளி­கையை அண்­டிய பகு­தியில் உள்ள கடற்­கரை பொது­மக்­க­ளுக்கு மூடப்­பட்­டது. இதற்கு அந்தப் பகுதி மக்கள் கடும் எதிர்ப்பை வெளிக்­காட்­டினர்.

இந்த எதிர்ப்பின் கார­ண­மாக மன்­னரும் அவரின் பரி­வா­ரங்­களும் அங்கு சில அசௌ­க­ரி­யங்­க­ளுக்கு முகம் கொடுக்க வேண்­டி­ய­தா­யிற்று.

showImageInStoryஇதனால் பில்­லியன் கணக்­கான டொலர்கள் செல­வி­டப்­பட்டு இந்த தென் பிரான்ஸ் விஜயம் மேற்கொள்ளப்­பட்­டி­ருந்த போதிலும் முற்­றிலும் எதிர்­பா­ராத வகையில் அதை திடு­திப்­பென கைவிட்டு விட்டு அங்­கி­ருந்து மொரோக்கோ நோக்கி பய­ண­மா­னார்கள்.

“இந்த விடு­முறை பய­ண­மா­னது உலக சனத்­தொ­கையில் பெரும்­பா­லா­ன­வர்­களால் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடி­யா­தது. உள்ளூர் சம்­பி­ர­தா­யங்கள் அனைத்தும் இந்த விடு­மு­றைக்­காக தூக்கி எறி­யப்­பட்­டன” என்று ஏ.எப்.பி. செய்திச் சேவை இதனை வர்­ணித்­துள்­ளது.

பொது­மக்­களின் பணத்தை விரயம் செய்து இவ்­வா­றா­னதோர் விடு­முறை பய­ணத்­துக்­கான தகுதி மன்னர் சல்மானுக்கு உள்­ளதா?

ஈரா­னுக்கும் யேம­னுக்கும் எதி­ராகத் தனது அமெ­ரிக்க, இஸ்ரேல் எஜ­மா­னர்­களின் திட்­டத்தை அமுல் செய்து கொண்டு 2015 மார்ச் முதல் யெமனில் பட்­டி­னியால் வாடும் அப்­பாவி முஸ்­லிம்­களை குண்டு வீசிக் கொலை செய்து கொண்டு இவ்­வா­றான ஒரு பய­ணத்தில் அவர் எவ்­வாறு ஈடு­பட முடியும்.

சவூதி அரே­பியா யெமனில் மேற்­கொண்ட கண்­மூ­டித்­த­ன­மான விமானத் தாக்­கு­தலால் ஆண்கள்,பெண்கள் சிறுவர்கள், முதி­ய­வர்கள் என வயது வித்­தி­யா­ச­மின்றி அப்­பாவி மக்கள் வகை­தொ­கை­யின்றி கொன்று குவிக்கப்­பட்­டனர்.

புனித றமழான் மாதத்தில் கூட எவ்­வித கட்­டுப்­பா­டு­க­ளு­மின்றி ஈவி­ரக்­க­மின்றி இந்தக் குண்டு வெடிப்பு நீடித்­தது. இதன் மூலம் சுமார் 21 மில்­லியன் யெமன் மக்கள் பட்­டி­னியால் வாடும் நிலைக்கு கொண்டு வரப்­பட்­டுள்­ளனர்.

இத­னால்தான் சவூதி மன்­ன­ருக்கு ஓய்வும், விடு­மு­றையும் தேவைப்­பட்­டதா? இத­னால் தான் அவர் உலகின் மிகவும் ஆடம்­ப­ர­மான அதி­சி­றந்த நவீன வச­திகள் கொண்ட உல்­லா­ச­பு­ரியை நாடிச் சென்­றாரா?

The Saudi King’s unpopular requirements garnered widespread media attention

ஓரு காலத்தில் உலகின் அதி சிறந்த பிர­மு­கர்­களும் தலை­வர்­களும் தங்­கிய இடம்தான் பிரான்ஸின் தென் பகுதியில் உள்ள இந்த வெலா­ரியஸ் மென்ஷன்.

The row was inflamed by the appearance of a concrete slab on the beach

கற்­பா­றைகள் நிறைந்த பகு­தியில் அழ­கான கடற்­கரை காட்­சி­க­ளோடு பல மீட்­டர்கள் தூரம் நீண்டு செல்லும் கண்ணைக் கவரும் ஒரு பிர­தே­சமே இது­வாகும்.

கடற்­க­ரையில் இருந்து நேராக இந்த மாளி­கைக்குள் செல்லும் வகையில் மோட்டார் தொட­ரணி வசதி மற்றும் மின்­தூக்கி வசதி என்­ப­னவும் ஏற்­ப­டுத்­தப்­பட்­டன.

(King Salman)

79 வய­தான மன்­னரை வர­வேற்று உப­ச­ரிக்க பத்து வாக­னங்­களைக் கொண்ட ஒரு தொட­ரணி தயார் நிலையில் இருந்­தது. தான் தங்­கி­யி­ருக்கும் காலப்­ப­கு­தியில் இந்த இடத்­துக்கு பொது­மக்கள் யாரும் வரக்­கூ­டாது என்றும், தான் அங்­கி­ருக்கும் காலப்­ப­கு­தியில் தனக்கு பிரத்­தி­யே­க­மான கடல்­கரை வலயம் ஒன்று தான் தங்­கி­யி­ருக்கும் மாளி­கையை சுற்றி உரு­வாக்­கப்­பட வேண்டும் என்றும் மன்னர் கேட்­டி­ருந்தார்.

சில காலங்­க­ளுக்கு முன்­பி­ருந்தே மன்­ன ரின் விஜ­யத்­துக்­கான தடல்­புடல் ஏற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­பட்­டன. இங்கு பல செயற்­பா ­டுகள் இடம்­பெற்­ற­தாக பொது மக்கள் தெரி­விக்­கின்­றனர்.

புதி­தாக யன்­னல்கள் பொருத்­தப்­பட்­டன, புதிய மலர் வகைகள் வைக்­கப்­பட்­டன. தான் தங்­கி­யி­ருக்கும் விடு­முறை இல்­லத்தின் மாடத்தில் இருந்து தங்­கு­த­டை­யின்றி காட்­சி­களைக் கண்டு களிக்க அவ­ரு க்கு மாடத்தில் அமர்ந்து இருக்கக் சுடிய சிம்­மா­சனம் போன்ற ஓர் ஆச­னமும் தயா­ரிக்­கப்­பட்டு வந்­த­தாகக் கூறப்­ப­டு­கின்­றது.

மன்­னரும் அவரின் பரி­வா­ரங்­களும் இங்­கி­ருந்து ஏனைய சுற்­றுலா இடங்­களைப் பார்­வை­யிடச் செல்­வ­தற்­காக 400 ஆடம்­பர சலூன் வகைக் கார்கள் தயார் நிலையில் வைக்­கப்­பட்­டன.

எவ்­வா­றேனும் பொது­மக்­க­ளுக்­கான கடற்­கரை மூடப்­பட்­டதை அடுத்து சுதந்­தி­ரத்­தையும் உரி­மை­யையும் பெரிதாக மதிக்கும் அந்த மக்கள் கொதிப்­ப­டைந்­தனர்.

இந்த சுற்­றுலா மாளி­கையைச் சுற்றி 300 மீற்றர் அல்­லது (985 அடி) பிரத்­தி­யேக வலயம் பிர­க­டனம் செய்யப்பட்டமைக்கு அப்பால் பொது­மக்கள் கடற்­க­ரையும் மூடப்­பட்­ட­மையே மக்கள் ஆத்­தி­ர­ம­டைய காரணமாயிற்று.

கடற்­க­ரையில் இருந்து மாளி­கைக்கு நேர­டி­யாக ஒரு மின்­தூக்கி அமைக்­கப்­பட்­டதும் அதற்கு பெரும்­பா­லான கடற்­கரைப் பகு­தியில் மணல் அகழ்­வுகள் இடம் பெற்­ற­மையும் மக்­களை மேலும் ஆத்­தி­ர­ம­டையச் செய்­தது.

கோடை விடு­முறை என்­பது நண்­பர்­க­ளோடும் உற­வு­க­ளோடும் செல­வி­டு­வ­தற்கு ஒரு சிறந்த காலப்­ப­கு­தி­யாகும் என்­பது உண்­மையே. ஆனால் அதற்­காக ஆயிரம் பேரை அழைத்துச் செல்­வது என்­பது சற்று அதி­க­மா­ன­தாகும்.

மன்னர் சல்­மானின் பரி­வா­ரங்கள் அந்த கடற்­கரை முழு­வ­தையும் ஆக்­கி­ர­மித்துக் கொண்­டன. அவ­ருக்கு மிகவும் நெருக்­க­மா­ன­வர்கள் அவர் தங்­கி­யி­ருந்த மாளி­கையைச் சூழ­வுள்ள இடங்­களை சுற்றி வளைத்துக் கொண்­டனர். ஏனைய சுமார் 700 பேர் கேன்ஸ் நகர ஹோட்­டல்­களில் இடம்­பி­டித்துக் கொண்­டனர்.

ஏண்ணெய் வள நாட்டின் இந்த மன்னர் பரி­வா­ரங்­களின் வரு­கையால் அந்த இடத்தில் பாது­காப்பும் பலப்படுத்தப்பட்­டது. பொலிஸ் மற்றும் பாது­காப்பு பிரி­வினர் வெவ்­வேறு இடங்­க­ளில் நிலை­கொண்­டி­ருந்­தனர்.

இந்தப் பிர­தேசம் மற்றும் இதனை அண்­டிய பகு­திகள் வழ­மை­யாக விடு­மு­றையை கழிக்க வரு­ப­வர்­க­ளாலும் சூரியக் குளி­ய­லுக்கு வரு­ப­வர்­க­ளாலும் நிரம்பி வழியும் ஒரு பிர­தே­ச­மாகும்.

ஆனால், மன்னர் சல்­மா னின் தனிப்­பட்ட விடு­முறை விஜ­யத்­துக்­காக கடற்­கரை பொது­மக்­க­ளுக்கு மூடப்பட்டது. அது­போக 300 மீற்றர் தனிப்­பட்ட கடல் வல­யத்­துக்­குள்ளும் யாரும் வர­வி­டாமல் தடுக்­கப்­பட்­டது.

மன்­னரின் வரு­கைக்­காக இந்த இடத்தில் மேற்­கொள்­ளப்­பட்ட கட்­டட பணி­க­ளுக்கு எதிர்ப்பு தெரி­வித்து அவற்றை நிறுத்­து­மாறு கேட்டு இந்த விலாரிஸ் நகரின் மேயர் பிரான்ஸ் ஜனா­தி­ப­திக்கு கடிதம் எழு­தினார். முன்னர் சல்­மானின் தனிப்­பட்ட வச­திகள் கரு­தியே இந்த நிர்­மாணப் பணிகள் மேற்­கொள்­ளப்­பட்­டன.

மன்­னரை அவர் தங்­கி­யி­ருந்த இடத்­தி­லி­ருந்து கடற்­க­ரைக்கும் அங்­கி­ருந்து அவர் தங்­கி­யி­ருக்கும் மாளி­கைக்கும் மிக இல­கு­வாக சுமந்து செல்லக் கூடிய வகையில் ஒரு தற்­கா­லிக மின்­தூக்கி நிர்­மா­ணிக்­கப்­பட்­டது. இதற்­கான தூண்­களை நிறுவ கடற்­க­ரையின் பெரும் பகுதி தோண்­டப்­பட்­டதை மக்கள் கடு­மை­யாக எதிர்த்­தனர்.

மன்னர் சல்­மானின் இந்த விடு­முறை விஜ­ய­மா­னது உண்­மையில் உலகில் பட்­டி­னியால் வாடும் மில்­லியன் கணக்­கான மக்­க­ளுக்கு இழைக்­கப்­பட்ட அநீ­தி­யாகும்.

முஸ்லிம் நாடு­களில் அமெ­ரிக்கா, பிரிட்டன், மற்றும் ஐரோப்­பிய நாடு­களால் மேற்­கொள்­ளப்­பட்ட யுத்­தங்கள் மற்றும் படை எடுப்­புக்கள் கார­ண­மாக சுமார் 59.5 மில்­லியன் முஸ்­லிம்கள் தமது சொந்த நாடு­களில் இருந்து இடம்­பெ­யர்ந்து வாழு­கின்­றனர்.

இந்தத் தாக்­கு­தல்­களில் சவூதி ஆட்­சி­யா­ளர்கள் வெளிப்ப­டை­யா­கவும் சுறு­சு­றுப்­பா­க­வும நிதி உத­வி­களை வழங்­கியும் ஏனைய வழி­க­ளிலும் ஒத்­து­ழைத்து வரு­கின்­றனர்.

அரச குடும்பம் என்ற கருப்­பொருள் இஸ்­லாத்­துக்கு புதிய விட­ய­மல்ல. ஆனால் அங்கு போதிக்­கப்­பட்­டுள்ள எளிமை மற்றும் பொறுப்புக் கூறல் என்­பன இங்கு தெட்­டத்­தெ­ளி­வாக மீறப்­பட்­டுள்­ளன.

உதா­ர­ணத்­துக்கு கலீபா உமரின் ஆட்­சி யின் போது ஒருவர் கலீ­பாவை இரவு நேரத்தில் சந்­திக்க வந்தார். அப்­போது கலீபா ஒளி விளக்கின் துணையில் வேறு ஒரு வேலையில் மும்­மு­ர­மாக இருந்தார். கலீபா உமர் மெது­வாக அவ­ரிடம் வந்த விட­யத்தை வின­வினார்.

அது ஒரு பரஸ்­பர நோக்­கி­லான விஜயம் என்று அவர் பதில் அளித்தார். உடனே கலீபா விளக்கின் ஒளியை நிறுத்­தி­விட்டார். அங்கு இருள் சூழ்ந்து கொண்­டது. வந்­தவர் ஏன் விளக்கை நிறுத்­தி­விட்­டீர்கள் என்று வின­வினார்.

“இந்த விளக்கில் இருக்கும் ஒளி அரசுக்கு உரி­யது. நான் அரச அலுவல் ஒன்­றி­லேயே ஈடு­பட்­டி­ருந்தேன். நீங்கள் வந்­தி­ருப்பது தனிப் ­பட்ட காரணம். தனிப்­பட்ட தேவைக்காக அரச வளத்தை பாவிக்கும் அதி­காரம் எனக்கு கிடையாது” என்று உமர் பதில் அளித்தார்.

ஏளி­மைக்கும் பொறுப்புக் கூற­லுக்­கு­மான மிகச் சிறந்த தெளி­வா­னதோர் உதா­ர­ண­மாக இது திகழ்­கின்­றது.

இதே­வேளை, சவூதி அரே­பிய ராஜதந்தி ரிகளும் சில தனி­ந­பர்­களும் பிரான்ஸ் மருத் துவமனை­களில் மருத்­துவ சோத­னை­களை மேற் கொண்­ட­மைக்­காக 3.7 மில்­லியன் யூரோக்­களை செலுத்­தாமல் வந்­துள்­ளனர் என்றும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

சவூதி மன்னர் பிரான்ஸிலிருந்து புறப்படுமுன் நல்லெண்ணத்தின் அடிப்படையில் பாரிஸ் மருத்துவ மனைக்கு 3.7 மில்லியன் யூரோக்களை செலுத்தவதே நல்லது என்று அந்த மருத்துவ மனையின் டுவிட்டர் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்­வா­றா­னதோர் மன்னர் எப்­படி முஸ்­லிம்­களின் இரு பெரும் இறை இல்­லங்­க­ளான மக்கா, மதீனா என்பன­வற்றின் பாது­கா­வ­ல­ராக இருக்க முடியும் என்­பதே தற்­போது மில்­லியன் கணக்­கான முஸ்­லிம்­களை குழப்­பத்தில் ஆழ்த்­தி­யுள்ள கேள்­வி­யாகும்.

மூன்று வார கால விடு­மு­றைக்­காக பில்­லியன் கணக்­கான பணத்தை வீண­டிக்கும் ஒருவர் எப்­படி இஸ்­லாத்தின் பிர­தி­நி­தி­யாக இருக்க முடியும்? உலகம் முழு­வதும் இலட்­சக்­க­ணக்­கான முஸ்­லிம்கள் பட்­டி­னியால் வாடு­கின்ற போது இப்­படிப் பொது­மக்கள் பணத்தை வீண­டிக்கும் ஒருவர் எப்படி முஸ்லிம் உலகின் தலைவராக இருக்க முடியும்?.

-பாரூக்-

Closed: The beach of Mirandole (circled) will be shut to the public during the height of summer, angering locals

Luxury: The private beach next to his villa (right) – which is located in the opulent Mirandole beach in the Cote d’Azur – is just six miles away from Cannes (left)

France got its first glimpse of the Saudi king and his 1,000-strong set to dominate the Riviera after they landed at Nice Airport

People enjoy a day at the beach near the home of the King of Saudi Arabia (pictured in the background)

The 79-year-old Saudi royal touched down by private Boeing 747 at nearby Nice airport on Saturday

King Salman arrived in a convoy of armoured Mercedes limousines accompanied by motorbike outriders

A French police van is parked at the entrance of the royal home, where the king and 1,000 members of his entourage arrived on Saturday
A French police van is parked at the entrance of the royal home, where the king and 1,000 members of his entourage arrived on Saturday

The king’s holiday home overlooks the beach, where a police sign says: ‘Access and circulation are forbidden’

Cars leave the villa of the Saudi king in Vallauris, which is located between Cannes and Antibes

The vehicles arrived despite protests by demonstrators angered that the King’s arrival has closed down part of a public beach

Share.
Leave A Reply

Exit mobile version