டெல்லி மெட்ரோ ரயிலில் பொலிசார் ஒருவர் போதையில் தள்ளாடி கீழே விழுந்த வீடியோ ஒன்று சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

சமூக வலை தளங்களில் பரவி வரும் அந்த வீடியோ டெல்லி மெட்ரோ ரயிலில் எடுக்கப்பட்டுள்ளது.

அந்த வீடியோவில், பொலிசார் ஒருவர் அளவுக்கதிகமாக குடித்துவிட்டு, நிற்கக்கூட நிதானமின்றி அமருவதற்கு இடம்தேடி அலைகிறார்.

சிறிது நேரத்துக்குள் அடுத்த நிறுத்தம் வந்துவிட, இறங்குவதற்காக வாசலை நோக்கிச் செல்லும் அவர், சரிந்து விழுகிறார்.

இதைக் கண்டு பதறிப்போன பொதுமக்கள், அந்த காவலரை, கைத்தாங்கலாக தூக்கி நிறுத்துகின்றனர்.

சாதாரண குடைக்காக சண்டையிட்ட பெண்கள்: தடுக்க வந்த நபரின் உயிர் பறிப்போன பரிதாபம்
22-08-2015
umbrlaஅமெரிக்க நாட்டில் சாதாரண குடைக்காக பெண்கள் இருவர் சண்டையிட்டபோது தடுக்க வந்த நபர் ஒருவரை காதலன் சரமாரியாக கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நியூயோர்க் நகரில் உள்ள ஹர்லெம் என்ற பகுதியில் தான் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்த பகுதியில் உள்ள ஒரு உணவு விடுதி ஒன்றிக்கு ஜீசஸ் சான்சியாகோ46) என்ற நபர் மோனிகா ஹெர்னடெஸ்(36) என்ற காதலியுடன் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வந்துள்ளார்.

சிறிது நேரத்திற்கு பிறகு உணவு விடுதியை விட்டு வெளியே வந்தபோது மோனிகா ஒரு குடையை எடுத்து வந்துள்ளார்.

இதனை கண்ட அருகில் இருந்த நான்சி(46) என்ற பெண், ‘அந்த குடை என்னுடையது. என்னிடம் கொடுங்கள்’ என கூறியுள்ளார்.

குடையை கொடுக்க மறுத்த மோனிக்கா ‘இது என்னுடைய குடை. உன்னிடம் கொடுக்க முடியாது’ என கூறிவிட்டு திரும்பி நடந்துள்ளார்.

மோனிகாவின் பதிலால் ஆத்திரம் அடைந்த நான்சி, மோனிகா கையில் இருந்த குடையை பிடித்து இழுத்துள்ளார். இரண்டு பேரும் குடையின் முனைகளை பற்றி இழுத்துக்கொண்டே சண்டையிட்டுள்ளனர்.

இந்த காட்சியை கண்ட நபர் ஒருவர் ஓடிவந்து நான்சிக்கு ஆதரவு அளிக்கும் வகையில், மோனிகாவின் கையில் இருந்த குடையை பிடித்து இழுத்துள்ளார்.

இதனை கண்டு அருகில் இருந்த மோனிகாவின் காதலரான ஜீசஸ் மிகவும் ஆத்திரம் அடைந்துள்ளார்.

உடனே தன்னிடம் இருந்த கத்தியை எடுத்துக்கொண்டு பாய்ந்து வந்து ஜீசஸ், அந்த நபரின் வயிற்றிலும் மார்பிலும் சரமாரியாக குத்தியுள்ளார்.

பின்னர், அதே ஆத்திரத்தில் திரும்பிய அவர், நான்சியின் முதுகிலும் 3 முறை சரமாரியாக குத்தியுள்ளார்.

இந்த தாக்குதலால் நிலைகுலைந்து போன இருவரையும் அருகில் இருந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆனால், சிகிச்சை பலனில்லாமல் தாக்குதலை தடுக்க வந்த நபர் பரிதாபமாக உயிரிழந்தார். நான்சியின் காயங்கள் மிக ஆழமாக இருப்பதால், அவர் இன்னும் அபாயக்கட்டத்திலேயே இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த தாக்குதல் தொடர்பாக, ஜீசஸ் மற்றும் மோனிக்காவை பொலிசார் கைது செய்துள்ளனர். ஆனால், விசாரணையில் அந்த குடை யாருக்கு சொந்தமானது என்பது குறித்து இன்னும் உறுதியான தகவல் கிடைக்கப்பெறவில்லை என பொலிசார் தெரிவித்தனர்.

சாதாரண குடைக்காக பெண்கள் இருவரின் சண்டை ஒரு அப்பாவி நபரின் உயிரை பறித்துள்ள சம்பவம் அப்பகுயில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Share.
Leave A Reply

Exit mobile version