ஜோடியொன்று ஓடும் புகையிரதத்தில் பயணிகள் மற்றும் விருந்தினர்கள் முன்னிலையில் திருமண பந்தத்தில் இணைந்த சம்பவம் அவுஸ்திரேலிய பேர்த் நகரில் இடம்பெற்றுள்ளது.
கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற இந்த திருமண நிகழ்வு குறித்து சர்வதேச ஊடகங்கள் செவ்வாய்க்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன.
மைக்கேல் ஹேவார்ட் என்ற மணமகனும் மெகான் கிரான்ட் என்ற மணகளுமே இவ்வாறு ஓடும் புகையிரதத்தில் திருமணம் செய்துள்ளனர்.
இந்தத் திருமணத்தில் விருந்தினர்களாக கலந்து கொள்ள அந்த ஜோடியின் 30 உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
தாம் புகையிரதத்தில் வைத்து திருமணம் செய்யவுள்ளதை அவர்களுக்கு அறிவிக்காத அந்த ஜோடி, தாம் வெறுமனே திருமண நிச்சயதார்த்தம் மட்டுமே செய்யவுள்ளதாக அவர்களை நம்ப வைத்திருந்தனர்.