மங்களூர்: கர்நாடக மாநிலம் மங்களூரில் பொது இடத்தில் இந்து பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்த ஒரே காரணத்துக்காக இஸ்லாமிய இளைஞர் ஒருவரை இந்துமதவெறி அமைப்பினர் கட்டிவைத்து அடித்து உதைத்த சம்பவம் நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மங்களூருவில் உள்ள கடை ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வரும் இஸ்லாமிய இளைஞர், அதே கடையில் விற்பனையாளராக பணிபுரியும் இந்து பெண்ணுடன் அருகில் இருந்த ஏ.டி.எம். க்கு பணம் எடுக்க சென்றுள்ளார்.

அப்போது இருவரும் பேசிக் கொண்டிருந்ததை கண்ட பஜ்ரங்தளம் அமைப்பினர் அந்த இளைஞரை பிடித்து மரத்தில் கட்டிவைத்து பயங்கரமாக தாக்கியுள்ளனர்.

mangalore-moral-policing_650x400_81440484320இதைத் தடுக்க முயன்ற அப்பெண்ணையும் அவர்கள் அடித்து விரட்டி உள்ளனர். இந்த காட்சிகள் உள்ளூர் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான நிலையில் சம்பவ இடத்திற்கு சென்று அந்த இளைஞரை மீட்டனர் போலீசார்.

இந்த வெறியாட்டத்தில் ஈடுபட்ட 30 வெறியர்களில் 14 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக தப்பி ஓடிய குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்துத்துவா கும்பலின் இந்த வெறியாட்டத்துக்கு பல்வேறு கட்சிகள், இயக்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன

Share.
Leave A Reply

Exit mobile version