தேசிய அரசாங்கத்தில் 45 அமைச்சர் பதவிகளை வழங்குவதற்கு இரு தரப்பும் இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிய வருகின்றது.
இதன்படி ஐக்கிய தேசிய கட்சிக்கு 30 அமைச்சு பதவிகளும் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு 15 அமைச்சுப்பதவிகளும் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவற்றில் உயர் கல்வி , நீர்பாசனம் , பெற்றோலியம் மற்றும் சமூர்த்தி அமைச்சுகள் சிரீ லங்கா சுதந்திரக் கட்சினை சேர்ந்தவரகளுக்கு வழங்கப்படவுள்ளதாக தெரிய வருகின்றது.
செப்.2ஆம் நாளே புதிய அமைச்சரவை பதவியேற்பு – அமைச்சர் பதவிகள் குறித்து இணக்கம்
26-08-2015
வரும் செப்ரெம்பர் 2ஆம் நாளே புதிய அமைச்சரவை பதவியேற்பு இடம்பெறும் என்று ஐதேகவின் தவிசாளர் மலிக் சமரவிக்கிரம தெரிவித்துள்ளார்.
தேசிய அரசாங்கத்தில் அமைச்சர்களாக நியமிக்கப்படவுள்ளவர்களின் அமைச்சுப் பதவிகள் குறித்து இணக்கப்பாடு காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எனினும், அமைச்சர்களின் பதவியேற்பு செப்ரெம்பர் 2ஆம் நாளே நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, நேற்றிரவு சந்திரிகா குமாரதுங்கவுக்கும், ரணில் விக்கிரமவிங்கவுக்கும், மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் நடந்த பேச்சுக்களில், 45 பேர் கொண்ட அமைசச்சரவையை அமைப்பதென்று முடிவெடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
இதன்படி 30 அமைச்சர் பதவிகள் ஐதேகவுக்கும், 15 அமைச்சர் பதவிகள் சிறி்லங்கா சுதந்திரக் கட்சிக்கும் வழங்கப்படும் என்று தீர்மானிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
முன்னதாக நாளை காலை அமைச்சர்கள் பதவியேற்பு இடம்பெறும் என்றே கூறப்பட்டது. எனினும் மூன்றாவது முறையாக இது செப்ரெம்பர் 2ஆம் நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.