புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கு இன்று மீண்டும் ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதிபதி எஸ் லெனின்குமார் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது குற்றம் சாட்டப்பட்டுள்ள 09 சந்தேக நபர்களும் மன்றுக்கு கொண்டுவரப்பட்டிருந்தனர்.

மாணவி வித்தியா கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 09 சந்தேக நபர்களையும் இன்று யாழ் போதனா வைத்தியசாலைக்குகொண்டு சென்று இரத்த மாதிரி மரபணு பரிசோதனை செய்யவேண்டுமென்றும் அதற்கு சிறைச்சாலை அத்தியட்சகரின் ஊடாக விண்ணப்பித்து துரித கதியில் அதனை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நீதிவான் உத்தரவிட்டார்.

அத்துடன் இந்த வழக்கின் சான்றுப்பொருட்களை பாதுகாக்கும் பொருட்டு அரச இராயன பகுப்பாய்வு திணைக்கள பணிப்பாளரிற்கு உத்தரவு பிறப்பிப்பதாகவும் தெரிவித்தார்.

வித்யா கொலை வழக்கு: பொலிசார் அடித்து வெள்ளை கடதாசியில் கையொப்பம் பெற்றதாக 3 ஆவது சந்தேக நபர் நீதிபதியிடம் முறைப்பாடு

image

சந்தேக நபர்களை நோக்கிய நீதிவான் ஏதாவது கூற விரும்புகின்றீர்களா என வினவிய வேளை 3 ஆவது சந்தேக நபரான சந்திரகாசன் என்பவர் தான் எவ்வித குற்றத்திலும் ஈடுபடவில்லை எனவும் பொலிசார் அடித்து வெள்ளை கடதாசியில் கையொப்பம் ஒன்றினை பெற்று இவ்வழக்கில் கைது செய்ததாக தெரிவித்தார்.

இதனை செவிமடுத்த நீதிவான் நீர் குற்றம் செய்தவரா இல்லையா என்பதை நீதிமன்றம் மிக விரைவில் தீர்மானிக்கும் அதுவரைக்கும் பொறுத்திருக்க வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் மாணவி வித்தியா கொலை வழக்கில் மாணவி சார்பாக ஆஜரான சட்டத்தரணி கடந்த வழக்குத்தவணையின்போது சமூகமளிக்காத காரணத்தால் அவருக்கு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதிபதி எஸ் லெனின்குமார் எச்சரிக்கை விடுத்தார்.

இன்றையதினம் நீதிமன்றில் வழக்கு விசாரணை நடைபெற்றபோது வித்தியா குடும்பம் சார்பாக ஆஜரான சட்டத்தரணி இந்த வழக்கின் காலநீடிப்பு தொடர்பாகவும் வழக்கின் போக்கு தொடர்பாகவும் எடுத்துரைத்தார்.

இதன் போது குறுக்கிட்ட நீதிவான் சட்டத்தரணியை பார்த்து மாணவி வித்தியா தொடர்பாக வழக்கில் கடந்த தவணையின்போது சமூகமளிக்காத விடையத்தினை சுட்டிக்காட்டியதுடன் நீதிமன்றுக்கு ஒவ்வொரு தவணையின்போதும் மன்றுக்கு ஒழுங்காக சமூகமளிக்க வேண்டும் என எச்சரித்தார்.

இதற்கு பதிலளித்த சட்டத்தரணி தான் கொழும்பில் இருந்து தான் இவ்வழக்கிற்கு ஆஜராகுவதாக நீதிவானின் கவனத்திற்கு கொண்டு வந்த போதிலும் அதனை நிராகரித்த நீதிபதி ஒழுங்காக மன்றில் ஆஜராகினால் வழக்கின் போக்கினை மாற்ற முடியும் என்பதை தெளிவுபடுத்தினார்.

இவ்வழக்கு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 1 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

வித்தியா படுகொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள்  “அதிரடிக்கு இணையதளத்துக்கு”  அளித்த  வாக்குமூலம் ஒலி வடிவில…


 

Share.
Leave A Reply

Exit mobile version