மும்பை : வளர்ப்பு மகனை காதலித்த சொந்த மகளை கொலை செய்து காட்டில் வீசிய தனியார் தொலைக்காட்சி பெண் நிறுவனர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.starபீட்டர் முகர்ஜியுடன் இந்திராணி‘ஸ்டார் இந்தியா’ தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி பீட்டர் முகர்ஜி. இவரது மனைவி இந்திராணி. இவர், ‘9 எக்ஸ் மீடியா’ என்ற தனியார் தொலைக்காட்சியின் நிறுவனர் ஆவார்.

இந்திராணியின் கார் டிரைவர் ஷாம் மனோகர் ராய் (வயது 43). இவர் சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்தால் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அவரிடம் நடத்திய விசாரணையில் சில அதிர்ச்சிக்கரமான தகவல்கள் கிடைத்தன.

9 எக்ஸ் மீடியா தொலைக்காட்சி நிறுவனரான இந்திராணி அவரது தங்கை ஷீனா போராவை கொலை செய்து மும்பையை அடுத்த ராய்காட் காட்டுப்பகுதியில் வீசியதாகவும், அதற்கு தான் உதவியதாகவும் அந்த டிரைவர் விசாரணையில் கூறி இருக்கிறார்.

இதையடுத்து மும்பை ஒர்லி பகுதியில் வசித்து வந்த இந்திராணியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் இன்னும் பல அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தன. ஷீனா போராவை தான் கொலை செய்ததை ஒப்புக்கொண்ட இந்திராணி, அவரை தனது தங்கை என்று கூறினார். ஆனால், சிறிது நேரம் கழித்து கொலை செய்யப்பட்ட ஷீனா போரா, தான் பெற்றெடுத்த மகள் என்று தெரிவிக்க கதையின் போக்கே மாறிப் போனது.


இந்திராணி

பீட்டர் முகர்ஜியும் இந்திராணியும் கடந்த 2002 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். பீட்டர் முகர்ஜிக்கு முதல் மனைவி மூலம் ராகுல் என்ற மகன் இருந்துள்ளார்.

இதேபோல, இந்திராணியும் ஏற்கனவே திருமணமானவர். அவருக்கு கொலை செய்யப்பட்ட ஷீனா போரா என்ற மகளும், மிக்கேல் போரா என்ற மகனும் உள்ளனர்.ஆனால், இந்திராணி தனது முதல் திருமணத்தையும் அதன் மூலம் பிறந்த குழந்தைகள் பற்றிய தகவல்களையும் பீட்டர் முகர்ஜியிடம் மூடி மறைத்து விட்டார்.
மாறாக மகள் ஷீனா போராவை தனது தங்கை என்றும், மகன் மிக்கேல் போராவை தனது தம்பி என்றும் தெரிவித்தார். அனைவரும் ஒரே வீட்டில் வசித்தனர்.
இதற்கிடையே கொலை செய்யப்பட்ட ஷீனா போராவுக்கும் ராகுலுக்குமிடையே காதல் மலர்ந்துள்ளது.
ஷீனா போராவுடன் ராகுல்மகளிடம் முறையற்ற இந்த காதல் வேண்டாம். இருவரும் சகோதர உறவு கொண்டவர்கள். எனவே உனது காதலை கைவிட்டு விடு என்று இந்திராணி கூறியுள்ளார். மகளை பல முறை கண்டித்து இருக்கிறார்.

மகள் தாயின் சொல்லை கேட்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த இந்திராணி சொந்த மகள் என்று பாராமல் கடந்த 2012 ஆம் ஆண்டு ஷீனா போராவை கொலை செய்து தனது டிரைவர் ஷாம் மனோகர் ராய், உதவியுடன் ராய்க்காட் காட்டுப் பகுதியில் வீசி விட்டு வந்து விட்டார். பின்னர் கணவரிடம் தங்கை ஷீனாவை அமெரிக்கா அனுப்பி வைத்து விட்டதாக பொய் கூறி விட்டார்.

அந்த சமயத்தில் ராய்க்காட் பகுதியில் பெண் ஒருவரின் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பின்னர் மர்ம மனிதர்களால் கொலை செய்யப்பட்டதாக கருதி போலீசார் அந்த வழக்கை கைவிட்டு விட்டனர்.

தற்போது இந்திராணி மற்றும் அவரது டிரைவர் ஆகியோர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர்கள் இருவரையும் உடல் வீசப்பட்ட இடத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து இருவரையும் கைது செய்து பாந்திரா மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வருகிற 31 ஆம் தேதி வரை அவர்கள் இருவரையும் போலீஸ் காவலில் ஒப்படைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த கொலையில் இந்திராணியின் முதல் கணவர் சஞ்சீவ் கண்ணாவுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. எனவே அவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மகளை கொன்று இரவு முழுவதும் காரில் மறைத்து வைத்த இந்திராணி


மும்பை: மகளை கொலை செய்து காரில் மறைத்து ஒரு நாள் இரவு முழுவதும் கேரரேஜில் வைத்திருந்தது ஸ்டார் டி.வி., முன்னாள் சி.இ.ஓ மனைவியிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மகளை கொலை செய்த வழக்கில் ஸ்டார் இந்தியா டிவி நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி பீட்டர் முகர்ஜியின் மனைவி இந்திராணி முகர்ஜியை போலீசார் கைது செய்துள்ளனர்.
அவரை ஆகஸ்ட்31 ஆம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயர் ஷீனா போரா.
இவர் மும்பையில் வோர்லி பகுதியில் வசித்து வந்தார். இவர் இந்திராணி முகர்ஜியின் மகள் ஆவார். கடந்த 2012 ஆம் ஆண்டில் காணாமல் போனார். பின்னர் நடந்த விசாரணையில், ஷீனா கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இந்த கொலை வழக்கில் இந்திராணி முகர்ஜியை போலீசார் நேற்று கைது செய்தனர். பந்த்ரா மாஜிஸ்டிரேட் நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் இந்திராணியிடம் மேலும் விசாரணை நடத்த வேண்டும் என போலீஸ் அதிகாரிகள் கோரிக்கை வைத்ததால் ஆகஸ்ட் 31வரை போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஸ்டார் இந்தியா நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரியாக பீட்டர் முகர்ஜி இருந்த போதுதான் அமிதாப் பச்சன் நடத்திய கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சி ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் ஆனது.
பீட்டர் – இந்திராணியின் திருமணம் 2002 ஆம் ஆண்டு நடைபெற்றது. மனிதவள மேம்பாட்டு நிறுவனத்தை நடத்தி வந்த இந்திராணி, பீட்டரின் இரண்டாவது மனைவியாவார்.
கடந்த 2012ம் ஆண்டு தனது மகள் ஷீனாவை கொலை செய்து அவரது உடலை யாருக்கும் தெரியாமல் வீசிவிட்டார். அதற்கு முன்னதாக ஷீனாவை கொலை செய்து காரில் மறைத்து சுற்றி விட்டு, பின்னர் தனது வீட்டில் உள்ள கேரேஜில் மறைத்து வைத்திருந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மூன்றாண்டுகளுக்குப் பின்னர் இந்த கொலை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்தக்கொலைக்காண காரணம் பற்றி பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Share.
Leave A Reply

Exit mobile version