கேர­ளாவில் உள்ள பாட­சாலை ஒன்றில் கல்வி பயிலும் 11 ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் 3 ஆம் வகுப்பு மாணவர் ஒரு­வரை கொலை செய்து அவ­ரது சட­லத்­துடன் உறவு கொண்டுள்ள சம்­பவம் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

இது தொடர்பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,

திரு­வ­னந்­த­புரம் மாவட்­டத்தில் உள்ள பாட­சாலை ஒன்றில் 11ஆம் வகுப்பு படித்து வந்த 17 வயது மாணவன் ஒருவன் ஆபாச படம் பார்த்­துள்ளான்.

இதை­ய­டுத்து அவன் 3ஆம் வகுப்பில் கல்வி பயின்று வந்த 9 வயது சிறுவர் ஒரு­வரை மறை­வான இடத்­திற்கு அழைத்துச் சென்று ஓரின சேர்க்­கையில் ஈடு­பட முயன்­றுள்ளான்.

அதற்கு அந்த சிறுவர் எதிர்ப்பு தெரி­வித்­ததால் கோப­ம­டைந்த அவன் வெற்று மது­போத்­த­லினால் சிறு­வனை தலையில் தாக்­கி­யுள்ளான்.

இதில் சிறுவன் மயங்கி விழுந்­ததும் அவன் சிறு­வ­னுடன் உறவு கொண்­டுள்ளான். இத­னை­ய­டுத்து சிறுவன் உயி­ரி­ழந்­துள்ளார்.

பிரேத பரி­சோ­த­னையில் சிறுவன் இறந்த பிறகே அந்த மாணவன் உறவு கொண்­ட­தாக தெரி­ய­வந்­துள்­ளது.

தற்போது குறித்த 17 வயது மாணவனை பொலிஸார் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குழந்தை திருமணம் நிறுத்த காவல் காத்த போலீசார்: மணமக்கள் தப்பி ஓட்டம்

28-08-2015

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே குழந்தை திருமணத்தை போலீசார் தடுத்து நிறுத்த சென்ற போது மணமக்கள் தப்பியோடி விட்டனர்.

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே புதுக்கேணி கிராமத்தை சேர்ந்த ராஜமாணிக்கம் மகன் சுரேஷ் (22). டிரைவரான இவருக்கும்  திருநாவலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆ.பாச்சாப்பாளையம் கிராமத்தை சேர்ந்த கொளஞ்சியப்பன் மகள் மேகலாவுக்கும் நேற்று காலை திருமணம்  நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது.

மணப்பெண் மேகலாவிற்கு 14 வயது என்றும் இந்த குழந்தை திருமணத்தை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் விழுப்புரம் மாவட்ட  சமூகநலத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது.

இதனை தொடர்ந்து வருவாய்துறை அதிகாரிகள் மற்றும் உளுந்தூர்பேட்டை போலீசார்  பாச்சாப்பாளையம் கிராமத்திற்கு சென்றனர்.

இதனை அறித்த பெண் வீட்டார் மணப்பெண் மேகலாவுடன் தலைமறைவாகி விட்டார்கள். இதனை  தொடர்ந்து வருவாய்த்துறையின் சார்பில் மணமகன் வீடு உள்ள எடைக்கல் காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.

இதனைதொடர்ந்து எடைக்கல் போலீசார் புதுக்கேணி கிராமத்திற்கு சென்றனர். ஆனால் அங்கு சுரேஷ் மற்றும் அவரது பெற்றோர்களும்  தலைமறைவானார்கள்.

இதனால் இரவு முழுவதும் இரண்டு கிராமங்களிலும் போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் காத்திருந்திருந்தனர்.   இரவு முழுவதும் காத்திருந்தது தான் மிச்சம்.

இரண்டு குடும்பத்தை சேர்ந்தவர்களும் எங்கு சென்றார்கள், திருமணம் நடைபெற்றதா என்பது குறித்து  எந்த தகவலும் தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version