தவறு செய்யும் ஆணை விட்டுவிடலாம். பெண்ணை ஊருக்கு வெளியே புறம் தள்ளி வைக்க வேண்டும்.
என்ன?… அண்ணல் காந்தியடிகள் பல வருடங்களுக்கு முன் சண்டாளர்கள் என்றால் யார் என சொன்னதை போன அத்தியாயத்தில் கேட்டீர்களா?
நீங்கள் இப்போது கேட்டதை நான் பற்பல வருடங்களுக்கு முன்னால் காந்தி வாயால் கேட்டு லேசாக அதிர்ந்தேன்.
பிறகு… நான் மநுவுக்குள் மூழ்க ஆரம்பித்தேன். ‘சண்டாளர்கள்’ என குறிப்பிட்ட மநு அவர்களைப் பற்றி மேலும் என்ன சொல்லியிருக்கிறது என்பதுதான் தேடல்.
பிராமண வீட்டுப் பெண்கள் சூத்திரர்களோடு ப்பிரியப்பட்டார்கள் அல்லவா?… அதே காரணத்துக்காக அவர்கள் சமூகத்திலிருந்து தனியே பிரிக்கப்பட்டார்கள்.
சமூகம்?…ஆமாம்… தொழில் முறையில் பிரிவு பிரிவுகளாக வாழ்ந்த மக்களை பிராமணர்கள் பார்த்தார்கள்.
‘நாளைய சந்ததியில் இவர்கள் தொழில் மாறிவிட்டால் என்ன சொல்லி அழைப்பது’-சிந்தித்தார்கள். a stable society அதாவது நிலையான சமூகக் கட்டுமான அமைப்பு வேண்டுமென்றால் அது சாதியாக பிரிக்கப்பட்டால்தான் உறுதியுடன் இருக்கும் என்பது பிராமணர்களின் கணிப்பு.
அதற்காக? பிறப்பின் அடிப்படையில் ஜாதியை வளர்த்தார்கள்.
சூத்திரனுக்கு பிறந்தவன் நாளை தொழில் மாறினாலும் சூத்திரன்தான். வைசியனுக்கு பிறந்தவன் பிறகு வணிகத்தை மறந்தாலும் அவன் வைசியன்தான்.
க்ஷத்திரியனுக்கு பிறந்தவன் பின்னாளில் ராஜ்யமின்றி நடுத்தெருவில் நின்றாலும் அவன் க்ஷத்திரியன்தான். இதுதான் அவர்கள் வகுத்த stable society.
மறுபடியும் மநுவுக்குள் செல்வோம்.
சாதி விட்டு சாதி மாறிய காதல்கள் பிராமண ஸ்திரிகளுக்கும், சூத்ர புத்ரர்களுக்கும் மட்டுமல்ல க்ஷத்திரிய ஸ்த்ரிகள்-சூத்ர புத்ரர்கள்வைசிய ஸ்திரிகள்-சூத்ர புத்ரர்கள்மேலும்…சூத்ர ஸ்திரிகள்-பிராமண, க்ஷத்திரிய, வைஸிய புத்ரர்கள்.
இப்படி காதல்தேவன் கட்டுகளை உடைத்து கல்யாணங்களை கள்ளத்தனமாக பண்ணிக் கொண்டிருந்தான்.
காதல் தேவனும், காமதேனும் கூட்டணி வைத்து இஷ்டத்துக்கு திருவிளையாடல் நடத்திக் கொண்டிருந்தால் மநு நினைத்த stable society அமையுமா? அமையாதே.
இதுவும் தெரிந்திருந்தது மநுவுக்கு. அதனால் தான் இந்த பிரச்சினைக்காக மாற்றுச் சட்டமும் இயற்றியிருக்கிறார்.
என்ன மாற்றுச் சட்டம்? முறைகேடான சாஸ்திரங்களை சாகடிக்கக்கூடிய வகையில் இது போல கலப்பு மணம் செய்து கொண்டவர்களுக்கு இரண்டு அளவுகோல் வைத்துப் பார்த்தார். மநு
ஒன்று.. அனுலோம சங்கரம்...
இரண்டு… ப்ரதிலோம சங்கரம் அனுலோம…
பிரதிலோம என்றால் என்ன என தெரிந்து கொள்வதற்கு முன் ‘சங்கரம்’ என்பதற்கு இந்த இடத்தில் என்ன பொருள் என்று தெரிந்து கொள்ளவேண்டும்.
முறைகேடான.. சபிக்கப் படக்கூடிய உறவுகள் உண்டாகுமானால் அந்த சாஸ்திர விரோத சம்பந்தத்துக்குப் பெயர்தான் ‘சங்கரம்’ என்பதற்கு இந்த இடத்தில் என்ன பொருள் என்று தெரிந்து கொள்ளவேண்டும்.
முறைகேடான… சபிக்கப்படக்கூடிய உறவுகள் உண்டாகுமானால் அந்த சாஸ்திர விரோத சம்பந்தத்துக்குப் பெயர்தான் ‘சங்கரம்’.
ஆனால், இவர்களை மநு சண்டாளர்களாக பார்ப்பதில்லை. ஏனென்றால் மேல் ஜாதி ஆண் அல்லவா? கீழ் ஜாதிப்பெண்ணை எடுத்துக் கொண்டிருக்கிறான்.
நம் இனத்து ஆண்… பிற இன பெண்களை பார்ப்பது, பறிப்பது, நுகர்வது, உறவுகள், உண்டாகுமானால் அந்த சாஸ்திர விரோத சம்பந்தத்துக்குப் பெயர்தான் பொதுவாய் ‘சங்கரம்’.
இக்கட்டுரையின் முற்பகுதியிலேயே சொன்னது போல எல்லா ஜாதிக் காரர்களுக்கும் அந்த ப்ரியம் பொதுவானதாக இருந்தது.
இந்த சம்மந்தத்தில் ஆண் மேல் ஜாதிக்காரனாகவும் பெண் கீழ்ஜாதிக்காரியாகவும் இருந்தால் இதற்கு பெயர் அனுலோம ‘சங்கரம்’. உலகத்துக்கே அமைதியைத் தருவது பெண்களின் அழகுதான்… என்றது வேதம்.
மநுவோ… கீழ்ஜாதிப் பெண்கள் மேல் ஜாதி ஆண்களைக் கவர்ந்தபோது மட்டும் அவர்களை கண்டுகொள்ளவில்லை. என்ன செய்தாலும் அது பாபம் அல்ல என்கிறது மநு.
இவர்களை அடித்துத் துரத்தி கொடுமைகள் செய்யாமல் தங்கள் உடனேயே தங்க வைத்துக் கொள்கிறது மநு சாஸ்திரம்.
அடுத்து சொல்லப்போகும் ‘ப்ரதிலோம சங்கரம்’ பற்றி நீங்கள் யூகித்திருக்கலாம். அதாவது….மேல்ஜாதிப் பெண்களை கீழ்ஜாதி ஆண்கள் கவர்ந்தது, பறித்து நுகர்ந்து சென்றால் மநுவின் பார்வையில் இது பிரதிலோம சங்கரம்.
அடேய்.. அதெப்படி நம் இனத்து பெண்ணை ஒரு கீழ்சாதிப் பயல் கவர்ந்து செல்லலாம்?… இவளுக்கு எங்கே போயிற்று புத்தி? ஊரைவிட்டே பகிஷ்காரம் பண்ணுங்கள் நாம் வாழும் தெருவில் அவர்களின் பாபத்தடங்கள் படக்கூடாது அவர்களின் சுவாசக்காற்று நமது தெருக்காற்றை உரசக்கூடாது.
அவர்களும், அவர்களைத் தொடர்ந்துவரும் சந்ததிகள் அத்தனை பேரும் சண்டாளர்கள் தான் சட்டம் இயற்றி தண்டனை விதித்தது மநு.
இதன் காரணமாக பிரதிலோம சங்கர கூட்டம் ஊரைவிட்டு விரட்டப்பட்டது. இன்று வரை அவர்கள் ஊரோரம் குடியிருக்கும் காரணம் புரிகிறதா?
ஆனால்… ‘அனுலோம சங்கர’ கூட்டத்துக்கு ஊரிலேயே இடம் கொடுத்து தேர் ஓட்டுங்கள் என ஆணையிட்டது மநு மநுவின் ‘சண்டாளன்’ என்ற பதத்துக்கு… சமஸ்கிருத மொழியியல் பேரறிஞரான பாணினி கூட அர்த்தம் தேடுகிறேன் எனச் சொல்லியிருக்கிறார். நாம் மேலும் வரலாற்றைத் தேடுவோம்.
-அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்
(தொடரும் )