நடை­பெற்று முடிந்த பொதுத்­தேர்­தலில் தாயகப் பகு­தி­களில் தமிழ்த் ­தே­சியக் கூட்­ட­மைப்பு வெற்றி பெற்றுள்ளது. அந்த வெற்றியை புலம்­பெயர் தமி­ழர்கள் வர­வேற்­று ள்­ளனர்.

கூட்­ட­மைப்பின் வெற்­றிக்கு பெரும்­பா­லான புலம்­பெயர் தமிழ் அமைப்­புக்­களும் வாழ்த்து தெரி­வித்­துள்­ளன. கூட்ட­மைப்­பிற்கே தாயகத் தமி­ழர்கள் வாக்­க­ளிக்க வேண்டும் என பெரும்­பா­லான புலம்­பெயர் தமி­ழர்கள் வேண்டுகோள் விடுத்­தி­ருந்­தனர். இதனை நாம் இப்­ப­கு­தியில் வெளி­யிட்­டி­ருந்­ததும் இங்கு குறிப்­பி­டத்­தக்­கது.

இருப்­பினும் புலம்­பெயர் தமிழ் அமைப்­புக்­களில் சில (புலியாதரவு அமைப்புகள்) மிகத் தீவி­ர­மாக தமிழ்த் தேசிய மக்கள் முன்­ன­ணியை ஆதரித்து வந்­தன.

மாற்­றத்­திற்­கான குரல் எனப் பெய­ரிட்டு அக்­கட்­சிக்கே தாயக மக்கள் வாக்­க­ளிக்க வேண்டும் எனக் கூறி வந்­தன.

TNPF_press_conferenceஅதனை புலம்­பெயர் தமிழ் ஊட­கங்கள் சில ஆத­ரித்­தன. அந்த ஊட­கங்­களும் அக்­கட்­சிக்கே வாக்­க­ளிக்க வேண்டும் எனப் பரப்­பு­ரை­களும் மேற்­கொண்­டன.

இதனால் பல்­வேறு விவா­தங்கள் கருத்து மோதல்கள் இங்கு இடம்­பெற்­றன. தாயக மக்­களின் நிலையை உணராமல் செய்­யப்­படும் பரப்­பு­ரை­களை புலம்­பெயர் தமிழ் மக்கள் கடு­மை­யாக எதிர்த்­தார்கள்.

அவ­ல த்­திற்கு இலக்­கான மக்கள் தங்கள் பிரதி நிதி­க­ளாக யாரை பாரா­ளு­மன்­றத்­திற்கு அனுப்ப வேண்டும் என்பதை தீர்­மா­னிப்­பார்கள்.

அதனை புலம்­பெயர் தமி­ழர்கள் முடிவு செய்யக் கூடாது என்றும் பெரும்­பா­லான புலம்­பெயர் தமி­ழர்கள் தமது கருத்­துக்­களை முன் வைத்­தனர்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்­ன­ணியை ஏன் ஆத­ரிக்க வேண்டும் என்­ப­தற்­கான கார­ணமும் இங்கு தெளி­வாக குறிப்­பி­டப்­ப­ட­வில்லை.

உலகத் தமிழர் பேரவை, கனடா தமிழ்க் காங்­கிரஸ், உலகத் தமிழ் பண்­பாட்டு இயக்கம் போன்ற அமைப்­புக்கள் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு தாயகத் தமிழர் வாக்­க­ளிக்க வேண்டும் என பகி­ரங்­க­மாக வேண்­டுகோள் விடுத்­தி­ருந்­தனர்.

ஆனால், தமிழர் ஒருங்­கி­ணைப்புக் குழு தமிழ்த் தேசிய மக்கள் முன்­ன­ணிக்கே வாக்­க­ளிக்க வேண்டும் எனக் கேட்­டி­ருந்­தது.

அனைத்­து­லக ஈழத் தமிழர் அவையும் இவ்­வா­றான வேண்­டு­கோளை விடுத்­தி­ருந்­தது. இந்த வேண்டுகோள்களின் போது புலம்­பெயர் தமி­ழர்­க­ளி­டையே தேர்தல் செல­விற்­கான பணமும் சேக­ரிக்­கப்­பட்­டது.

தேர்தல் நடை­பெ­று­வ­தற்கு முதல் நாள் தமி­ழீழ விடு­தலைப் போராட்­டத்தை தொ டர்ச்­சி­யாக ஆத­ரித்து வரும் கவிஞர் காசி ஆனந்­தனும் கள­மி­றக்­கப்­பட்­டி­ருந்தார்.

தமிழ்த் ­தே­சிய மக்கள் முன்னணிக்கு வாக்­க­ளிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். அவரின் வேண்டுகோள் சகலபுலம் பெயர் தமிழ் ஊட­கங்­க­ளிலும் வெளியா­கி­யது இங்கு குறிப்­பி­டத்­தக்­கது.

இருப்­பினும் இவ்­வா­றான வேண்­டு­கோள்­க­ளையும் தாண்டி தாயகத் தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்­க­ளித்­துள்­ளனர். அதன் மூலம் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பே தமி­ழர்­களின் கட்சி என்பதையும் சர்­வ­தே­சத்­திற்கு தெரி­யப்­ப­டுத்­தி­யுள்­ளனர்.

தாயகத் தமிழ் மக்­களின் நிலைப்­பாட்டை தவ­றாக எடை போட்ட அமைப்­புக்க­ளுக்கு முடிவு அதிர்ச்­சியை அளித்துள்­ளது.

அதே நேரத்தில் தமது விருப்பை தாயக மக்கள் நிறை­வேற்­று­வார்கள் என்ற ஒரு­த­லைப்­பட்­ச­மான முடி­விலும் மாற்­றத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

அந்த மக்­களின் விடி­ய­லுக்­காக போரா டும் புலம்­பெயர் தமிழ் மக்கள் அவர்க ளின் நிலைப்­பாட்டை சரி­வர புரிந்து கொள்ள வேண்டும் என ஆய்­வா­ளர்கள் குறிப்­பிட்டு வரு­கின்­றனர்.

சர்­வ­தே­சத்தின் கவனம் எமது பக்கம் திரும்ப வேண்­டு­மாயின் இரு தரப்பும் ஒன்­றாக இணைந்தே செயற்படவேண்­டு­மெ­னவும் அவர்கள் குறிப்­பி­டு­கின்­றனர்.

தமி­ழர்­களின் போராட்டம் ஒரு முக்­கி­ய­மான இலக்கு நோக்­கியே அமைந்­துள்­ளது. செப்­டெம்பர் மாதம் 14ஆம் திகதி ஐ.நா. மனித உரிமைப் பேர­வையின் 30 ஆவது கூட்­டத்­தொடர் ஆரம்­ப­மா­க­வுள்­ளது.

அதில் இலங்கை அர­சுக்­கெ­தி­ரான போர்க்குற்ற விசா­ரணை அறிக்கை வெளி­யி­டப் ­ப­ட­வுள்­ளது. சர்­வ­தேச குற்றவியல் நீதி­மன்ற விசா­ர­ணைக்­காக அந்த அறிக்கை அனுப்­பப்­பட வேண்டும் என புலம்­பெயர் தமிழ் மக்கள் போராடி வரு­கின்­றனர்.

அவ்­வா­றான கோரிக்­கையை முன்வைத்து ஜெனீவா ஐ.நா. பணி­மனை எதிரே செப்­டெம்பர் 21 ஆம் திகதி மாபெரும் கவ­ன­யீர்ப்பு போராட்டம் ஒன்றை அவர்கள் நடத்­த­வுள்­ளனர். இது குறித்த விரி­வான தக­வல்­களை நாம் கடந்த வாரம் வெளி­யி ட்­டி­ருந்தோம்.

ஆனால் இந்­நி­லையில் தேர்தல் முடிந்து ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான அரசு பதவி ஏற்­றுள்­ளது. தேர்தல் ஜன­நா­யக முறையில் இடம்­பெற்­ற­தாக சர்­வ­தேச ஊட­கங்­களே பாராட்டும் தெரி­வித்­துள்­ளன.

தேசிய அர­சொன்றை அமைத்து நாட்டை சமா­தான வழியில் ஆட்சி செய்யப் போவ­தாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அறி­வித்­துள்ளார். தேசிய அரசில் இணைந்து கொள்­ளு­மாறு சகல கட்­சி­க­ளையும் அவர் கேட்­டுள்ளார்.

அவ்­வா­றான சூழ்­நி­லையில் ஐ.நா. மனித உரிமைப் பேர­வையில் இலங்கை அர­சுக்கு எதி­ரான கடும் நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டுமா என்­பதில் சந்­தே­கமே. அதிலும் கூட்­ட­மைப்பு அர­சுடன் இணைந்து விட் டால் உள்­ளக விசா­ரணை என்ற முடி­வுக்கு பேர­வையின் உறுப்பு நாடுகள் வரலாம்.

ஆனால் உள்­ளக விசா­ர­ணையில் உலகத் தமி­ழர்­க­ளுக்கு நம்­பிக்கை இல்லை. உண்­மை­யான குற்­ற­வா­ளி­க­ளுக்கு அங்கு தண்­டனை வழங்­கப்­படும் என்­பதை தாயக மக்­களும் நம்­ப­வில்லை.

மிகப் பெரிய இன அழிப்­புக்கும் மனித உரிமை மீறல் அவ­லத்­திற்கும் உள்­ளான தமி­ழ­ருக்கு முதலில் நியாயம் கிடைக்க வேண்டும்.

குற்­றங்­களில் ஈடு­பட்­ட­வர்­க­ளுக்கு கடு­மை­யான தண்­டனை வழங்­கப்­பட வேண்டும். இதனையே புலம்­பெயர் தமி­ழர்கள் அழுத்­த­மாக கூறி வரு­கின்­றனர்.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு அரசில் இணை­வது குறித்து எவ்­வித முடிவும் எடுக்­கப்­ப­ட­வில்லை என்றே குறிப்பி­டப்­ப­டு­கின்­றது. ஆனால் பி.பி.சி. தமி­ழோசை இது தொடர்­பாக வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களைச் சேர்ந்த சிலரின் கருத்­துக்­களை கேட்­டி­ருந்­தது.

தமி­ழரின் கொள்­கையை நிறை­வேற்­று­வ­தற்கு சந்­தர்ப்பம் இருந்தால் அர­சுடன் இணை­வது தவ­றல்ல என அதன்போது பலர் கருத்து தெரி­வித்­தி­ருந்­தனர்.

தமி­ழரின் வாழ்க்­கைத்­தரம் உயர்த்­தப்­ப­டு­வ­தற்கும் கூட்­ட­மைப்பு அர­சுடன் இணைந்து செயற்­ப­டு­வதே சிறந்­தது என்றும் சிலர் குறிப்பிட்டனர்.

இருப்பினும் இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொகுதி வாரியாக தமிழ் மக்களின் கருத்துக்களை கேட்டறி வது மிக அவசியமாகின்றது. பெரும்பான்மையான தாயக மக்கள் விரும்பும் முடிவை கூட்டமைப்பு செயற்படுத்த வேண்டும் என அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

எது எப்படி இருப்பினும் தமிழர் பிரச் சினைக்கான தீர்வு விடயத்தில் சர்வதேச த்தின் கவனம் குறைவாகவே காணப்படு கின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் புலம் பெயர் தமிழ் அமைப்புக்களும் இவ் விடயத்தில் மிக அழுத்தமாக இருப்பதன் மூலமே சர்வதேசத்தின் கவனத்தை அதிகரிக்க முடியும் என்றும் பல ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

-வி.ஆா. தவராசா-

Share.
Leave A Reply

Exit mobile version