”தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேசியப் பட்டியல் ஆசனங்களை மக்களால் நிராகரிக்கப்பட்ட வர்களுக்கு வழங்குவதில்லை என்ற புதிய கொள்கை ஒன்றை வரைந்து கொள்வது நல்லது.

அது கட்சிக்கும் நல்ல பெயரைக் கொடுக்கும், தோல்வியுற்ற வேட்பாளர்களின் நெருக்கடிகளில் இருந்தும் பாதுகாப்புக் கொடுக்கும்”

பாரா­ளு­மன்றத் தேர்­தலில் கிடைத்த இரண்டு தேசியப் பட்­டியல் ஆச­னங்­க­ளுக்­கான நிய­ம­னங்கள், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்குள் மீண்டும் புகைச்­சலை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் இரண்டு தேசியப் பட்­டியல் ஆச­னங்­களில் ஒன்று திரு­கோ­ண­மலை மாவட்டத்தில் போட்­டி­யிட்டு- தோல்­வி­யுற்ற துரை­ரட்­ண­சிங்­கத்­துக்கும், மற்­றொன்று வன்னி மாவட்­டத்தில் வெற்­றி­வாய்ப்பை இழந்த சாந்தி ஸ்ரீஸ்­கந்­த­ரா­ஜா­வுக்கும் வழங்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

இந்த இரண்டு பேருமே, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பிர­தான பங்­காளிக் கட்­சி­யான தமி­ழ­ரசுக் கட்­சியின் சார்பில் போட்­டி­யிட்­ட­வர்கள்.

இதனால், இரண்டு தேசி­யப்­பட்­டியல் ஆச­னங்­க­ளையும் தமி­ழ­ரசுக் கட்சி தம­தாக்கிக் கொண்டு, ஏனைய பங்காளிக் கட்­சி­க­ளுக்கு அநீதி இழைத்து விட்­ட­தான குற்­றச்­சாட்­டுகள் எழுப்­பப்­ப­டு­கின்­றன.

குறிப்­பாக தமி­ழ­ரசுக் கட்­சியின் மீது வெளிப்­ப­டை­யாக இந்தக் குற்­றச்­சாட்டைச் சுமத்­தி­யி­ருப்­பது ஈ.பி.ஆர்.எல்.எவ். தான்.

அதற்குப் பிர­தான காரணம், ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்­சியின் தலைவர் சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் இம்­முறை பாராளுமன்றத் தேர்­தலில் வெற்றி பெற­வில்லை.

அவர் தேசியப் பட்­டியல் ஆச­னங்­களில் ஒன்றைப் பெறும் முயற்­சியில் ஈடு­பட்­டி­ருந்தார்.

அந்த முயற்சி தோல்­வியில் முடிந்­துள்ள நிலையில் தான், தமி­ழ­ரசுக் கட்சி மீது அவர் காட்­ட­மான கருத்துக்களை முன் வைத்து வரு­கிறார்.

தேசியப் பட்­டியல் ஆச­னங்­களை நிரப்பும் விட­யத்தில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­மைக்கு பல தெரிவுகள் இருந்­தன.

அதே­வேளை, கடு­மை­யான அழுத்­தங்­க­ளையும் எதிர்­கொள்ள நேரிட்­டது.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு ஏற்­க­னவே 9 பேர் கொண்ட தேசியப் பட்­டி­யலை தேர்­தல்கள் திணைக்­க­ளத்­திடம் ஒப்­ப­டைத்­தி­ருந்­தது.

அதில், பேரா­சி­ரியர் சி.க.சிற்­றம்­பலம், நாச்­சியார் செல்­வ­நா­யகம் உள்­ளிட்டோர் இடம்­பெற்­றி­ருந்­தனர்.

தமி­ழ­ரசுக் கட்­சியின் மூத்த தலை­வர்­களில் ஒருவர் பேரா­சி­ரியர் சி.க.சிற்­றம்­பலம்.

இது­வ­ரையில் தேர்தல் வாய்ப்­புகள் எதுவும் வழங்­கப்­ப­டா­தவர் என்ற வகையில், அவ­ருக்கு தேசியப் பட்­டியல் ஆசனம் வழங்­கப்­பட வேண்டும் என்ற கருத்து வலுப்­பெற்­றி­ருந்­தது.

ஆனால், தேர்­தலில் இரண்டு ஆச­னங்­களை பெற்ற பின்னர் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு, அந்த தேசியப் பட்டியலையே மறந்து போனது.

தம்மால் முன்­மொ­ழி­யப்­பட்ட 9 பேரையும் கைவிட்டு விட்டு, தேர்­தலில் போட்­டி­யிட்டுத் தெரி­வா­காத இரு­வரை பாரா­ளு­மன்­றத்­துக்கு அனுப்ப முடிவு செய்­தது.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு சார்பில் பாரா­ளு­மன்றத் தேர்­தலில் வெற்றி பெற்ற 14 பேரில், 8 பேர் தமி­ழ­ரசுக் கட்சியைச் சேர்ந்­த­வர்கள்.

திரு­கோ­ண­ம­லையில் இரா.சம்­பந்தன், மட்­டக்­க­ளப்பில் ஸ்ரீநேசன், யோகேஸ்­வரன், வன்­னியில் சாள்ஸ் நிர்மலநாதன், யாழ்ப்­பா­ணத்தில் மாவை சேனா­தி­ராசா, ஸ்ரீதரன், சுமந்­திரன், சர­வ­ண­பவன் ஆகி­யோரே அவர்கள்.

அதே­வேளை, புளொட் சார்பில் யாழ்ப்­பா­ணத்தில் தர்­ம­லிங்கம் சித்­தார்த்தன், மட்­டக்­க­ளப்பில் அமல் மாஸ்டர், ஈ.பி.ஆர்.எல்.எவ். சார்பில், வன்­னியில் சிவ­சக்தி ஆனந்தன் மற்றும் சிவ­மோகன், ரெலோ சார்பில், வன்­னியில் செல்வம் அடைக்­க­ல­நாதன், அம்­பா­றையில் கோடீஸ்­வரன் ஆகியோர் வெற்றி பெற்­றனர்.

இந்­த­நி­லையில், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு கிடைத்த 2 தேசியப் பட்­டியல் ஆச­னங்­களில் ஒன்றை தமிழரசுக் கட்சி வைத்துக் கொள்­ளலாம் என்றும், மற்­றை­யதை தமக்கு வழங்­கு­மாறும் பங்­காளிக் கட்­சிகள் கேட்டுக் கொண்­டன.

அதற்­கி­டையில், தமி­ழ­ரசுக் கட்­சிக்­குள்­ளேயும், தேசியப் பட்­டியல் ஆச­னத்­துக்குப் போட்டி எழுந்­தது.

ஆக, கூட்­ட­மைப்பின் கையில் இரண்டு அப்­பங்கள் தான் இருந்­தன.

அவற்றை இரண்டு மாகா­ணங்­க­ளுக்கு என்ற அடிப்­ப­டையில் பகி­ரு­வதா, ஐந்து தேர்தல் மாவட்­டங்கள் என்று பகி­ரு­வதா, நான்கு பங்­காளிக் கட்­சிகள் என்று பகி­ரு­வதா என்ற குழப்­ப­மான ஒரு நிலை ஏற்­பட்­டது.

அதை­விட யாழ்ப்­பாண மாவட்­டத்தில், போட்­டி­யிட்டு சில­நூறு விருப்பு வாக்­கு­களால் தோல்­வி­ய­டைந்த தென்மராட்­சியைச் சேர்ந்த அருந்­த­வ­பா­ல­னுக்கு ஒரு ஆசனம் வழங்­கப்­பட வேண்டும் என்று அந்தப் பகு­தியில் இருந்து கோரிக்­கைகள் விடுக்­கப்­பட்­டன.

மற்­றொரு பக்­கத்தில் சுரே­­­­ஷ் பிரே­மச்­சந்­தி­ர­னுக்கு வழங்­கப்­பட வேண்டும் என்று ஈ.பி.ஆர்.எல்.எவ். கோரி­யது.

மற்­றொரு பக்­கத்தில் பெண் ஒரு­வ­ருக்கு வாய்ப்பு வழங்­கு­மாறு கோரிக்­கைகள் விடுக்­கப்­பட்­டன.

ஒரு பகுதி பெண்கள் அமைப்­புகள் யாழ்ப்­பா­ணத்தில் போட்­டி­யிட்ட மதினி நெல்­ச­னுக்கு ஆத­ர­வா­கவும், மற்றொரு பகுதி அமைப்­புகள் சாந்தி ஸ்ரீஸ்­கந்­த­ரா­ஜா­வுக்கு ஆத­ர­வா­கவும் குரல் கொடுத்­தன.

மட்­டக்­க­ளப்பில், இருந்து பட்­டி­ருப்புத் தொகு­தியைச் சேர்ந்த எவரும் இம்­முறை பாரா­ளு­மன்றம் செல்­ல­வில்லை என்றும், எனவே அந்த தொகு­தியைச் சேர்ந்த பொன்.செல்­வ­ராசா அல்­லது அரி­ய­நேத்­தி­ரனை தெரிவு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடப்­பட்­டது.

அம்­பாறை மாவட்­டத்தில் இருந்து கல்­மு­னைக்கு ஒரு தமிழ்ப் பிர­தி­நி­தித்­துவம் தேவை என்று கோரப்­பட்­டது.

ரெலோ தமது சார்பில், தோல்­வி­யுற்ற நான்கு வேட்­பா­ளர்­களில் ஒரு­வரை நிய­மிக்­கு­மாறு கேட்­டது.

ஆக, மொத்­தத்தில், பல­மு­னை­களில் அழுத்­தங்­களும் தெரி­வு­களும் இருந்­தன.

இந்தக் கட்­டத்தில் வடக்கு, கிழக்கு என்ற ஆச­னங்கள் பகி­ரப்­பட வேண்டும் என்றும், ஒரு ஆசனம் பெண் ஒருவருக்கு வழங்­கப்­பட வேண்டும் என்றும் முடி­வெ­டுத்­தது கூட்­ட­மைப்பு தலைமை.

கிழக்கில் ஒரு­வரைத் தெரிவு செய்யத் தீர்­மா­னிக்­கப்­பட்ட போது, அம்­பா­றை­யிலும், திரு­கோ­ண­ம­லை­யிலும். மட்டும் தான் கூட்­ட­மைப்­புக்கு தனி­யொரு ஆசனம் கிடைத்­தி­ருந்­தது.

மட்­டக்­க­ளப்­புக்கு 3 ஆச­னங்கள் கிடைத்­ததால், போட்­டிக்­க­ளத்தில் இருந்து அகற்­றப்­பட்­டது.

அம்­பா­றையில் ஒரு உறுப்­பினர் இருந்­தாலும், அவர் முழு­நே­ர­மாக அங்கு பணி­யாற்றும் வாய்ப்பு இருந்­தது.

அதே­வேளை, திரு­கோ­ண­ம­லையில் இருந்து முழு­நே­ர­மாக பணி­யாற்ற முடி­யாத நிலையில் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் இருந்தார்.

அவர் கூட்­ட­மைப்பு தொடர்­பான பணி­களில் ஈடு­படும் போது மாவட்­டத்தின் நலன் கருதி முன்னாள் பாராளுமன்ற உறுப்­பினர் துரை­ரட்­ண­சிங்­கத்தை தெரிவு செய்ய முடி­வெ­டுக்­கப்­பட்­டது.

அவர் இரா.சம்­பந்­த­னுக்கு அடுத்த படி­யான விருப்பு வாக்­கு­களை பெற்­றி­ருந்­தவர். சம்­பந்­த­னுக்கு மிகவும் நம்பிக்கை­யா­ன­வரும் கூட.

ஒரு வகையில் இரா.சம்­பந்தன், தான் விரும்­பி­ய­படி, துரை­ரட்­ண­சிங்­கத்தை தேசி­யப்­பட்­டி­ய­லுக்கு கொண்டு வந்து சேர்த்தார்.

இதற்­காக இரா.சம்­பந்தன் முன்­வைத்த நியா­யங்கள் சரி­யா­னதா – தமது வச­திக்­கேற்ப சூழ்­நி­லையை ஏற்­ப­டுத்திக் கொண்­டாரா என்ற விமர்­ச­னங்­களும் உள்­ளன.

இப்­போது, வடக்கில் இருந்த ஒரு ஆச­னத்தை எப்­ப­டியும் பெண் வேட்­பா­ள­ருக்கே கொடுக்க வேண்­டிய நிலை.

அதே­வேளை, யாழ்ப்­பா­ணத்தில் ஏற்­க­னவே தமி­ழ­ரசுக் கட்­சிக்கு 5 உறுப்­பி­னர்கள் இருந்­தனர்.

யாழ்ப்­பா­ணத்தில் போட்­டி­யிட்ட மதினி நெல்­ச­னுக்கு கிடைத்த விருப்பு வாக்­குகள் குறைவு.

ஆனால், வன்­னியில் போட்­டி­யிட்ட சாந்தி ஸ்ரீஸ்­கந்­த­ராஜா மிக குறைந்த வாக்கு வித்­தி­யா­சத்தில் சிவமோகனிடம் தோல்­வி­யுற்­றவர். இதனால் சாந்தி ஸ்ரீஸ்­கந்­த­ராஜா தெரிவு செய்­யப்­பட்டார்.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இது­தொ­டர்­பாக முன்­வைத்த நியா­யப்­பா­டு­களை ஏற்க ஈ.பி.ஆர்.எல்.எவ். தலைவர் சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் தயா­ராக இல்லை. அவர் அந்தப் பத­வியை எதிர்­பார்த்­தி­ருந்தார்.

பாரா­ளு­மன்ற ஆச­னத்தை சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் இழந்­துள்­ளதால், கூட்­ட­மைப்­புக்குள் அவர் முக்­கி­யத்­து­வ­மி­ழக்கும் நிலை ஒன்று ஏற்­படக் கூடும் என்ற கருத்தும் உள்­ளது.

ஏனென்றால், கூட்­ட­மைப்பில் உள்ள கட்­சி­களின் தலை­வர்கள் என்ற அடிப்­ப­டையில் அவர் எல்லா சந்­திப்­புகள், பேச்­சு­க­ளிலும் கலந்து கொண்டார். வெளி­நா­டு­க­ளுக்கும் சென்­றி­ருந்தார்.

நாடா­ளு­மன்ற உறுப்­பினர் பத­வியில் இல்­லாத சூழலில் அவரால் அப்­படி தொட­ர­மு­டி­யுமா என்ற கேள்வி இருக்கி­றது.

ஏற்­க­னவே கடந்­த­வாரம், அமெ­ரிக்­காவின் உதவி இரா­ஜாங்கச் செயலர் நிஷா பிஸ்­வா­லு­ட­னான சந்­திப்­புக்கு அவர் அழைக்­கப்­ப­ட­வில்லை.

வடக்கு மாகா­ண­சபைத் தேர்­த­லுக்கு முன்­னரே புளொட் கூட்­ட­மைப்­புக்குள் வந்­தாலும், அந்தக் கட்­சியின் தலைவர் சித்­தார்த்­தனை கூட்­ட­மைப்பின் சந்­திப்­புகள் பேச்­சுக்­களில் காண முடி­வ­தில்லை.

அதற்கு முக்­கிய காரணம் அவர் பங்­காளிக் கட்சித் தலை­வ­ராக இருந்­தாலும், பாரா­ளு­மன்ற உறப்­பினர் என்ற அந்­தஸ்து அவ­ருக்கு இருக்­க­வில்லை.

இப்­போது அது அவ­ருக்கு கிடைத்­தி­ருக்­கி­றது. ஆனால் சுரேஷ் பிரே­மச்­சந்­தி­ர­னிடம் இருந்து அது பறிபோயிருக்கிறது.

இதனால், சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் ஓரம்­கட்­டப்­படும் நிலை ஒன்று ஏற்­படக் கூடும்.

அதை­விட ஏற்­க­னவே கூட்­ட­மைப்­புக்குள் நிலவும் பிரச்­சி­னை­களை பல்­வேறு சந்­தர்ப்­பங்­களில் வெளியில் போட்­டு­டைத்து பூதா­கா­ரப்­ப­டுத்­திய விவ­கா­ரத்தில் சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் தொடர்­பாக தமி­ழ­ரசுக் கட்­சியின் தலை­வர்கள் மத்­தியில் அதி­ருப்­திகள் இருந்­த­தையும் மறுக்க முடி­யாது.

யாழ்ப்­பா­ணத்தில் இரா.சம்­பந்தன், சுமந்­தி­ரனின் கொடும்­பா­விகள் எரிக்­கப்­பட்­டதில் சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் பின்பு­லத்தில் இருந்­த­தாக கூறப்­பட்­டாலும் அதனை அவர் உட­ன­டி­யா­கவே நிரா­க­ரித்­தி­ருந்தார்.

இந்தச் சூழலில், சுரேஷ் பிரே­மச்­சந்­தி­ர­னுக்குச் சாத­க­மான ஒரு நிலை இருக்­க­வில்லை.

அவர், யாழ்ப்­பா­ணத்தில் விருப்பு வாக்­கு­களில் ஏழா­வது இடத்தில் இருந்தார்.

இதனால், ஆறா­வது இடத்தில் இருந்த அருந்­த­வ­பா­லனைக் கடந்து அவ­ருக்கு வாய்ப்பு வழங்க முடி­யாது என்றார் இரா.சம்­பந்தன்.

எனினும், சுரேஷ் பிரே­மச்­சந்­தி­ர­னுக்கு ஒரு கட்­சியின் தலைவர் என்ற வகையில், தேசியப் பட்­டியல் ஆச­னத்தை கூட்­ட­மைப்புத் தலைமை வழங்­கி­யி­ருக்­கலாம்.

ஆனால், அவ்­வாறு வழங்­கினால், இதே­பி­ரச்­சினை வடக்கு மாகா­ண­சபைத் தேர்­தலில், வந்த போது, கூட்டமைப்புத் தலைமை எடுத்த முடிவை அது கேள்­விக்­குள்­ளாக்­கு­வ­தாக அமையும்.

அப்­போதும் இரு போனஸ் ஆச­னங்கள் கிடைத்­தன. அதில் ஒன்று முஸ்லிம் பிர­தி­நி­திக்கு ஒதுக்­கப்­பட்­டது. மற்ற இடத்­துக்கு கடும் போட்டி ஏற்­பட்­டது.

அந்த தேர்­தலில் கிளி­நொச்சி மாவட்­டத்தில் போட்­டி­யிட்டு படு­தோல்வி கண்­டி­ருந்தார் தமிழர் விடு­தலைக் கூட்ட­ணியின் தலைவர் ஆனந்­த­சங்­கரி.

அவ­ருக்கு பங்­காளிக் கட்­சியின் தலைவர் என்ற வகையில் அந்த ஆசனம் ஒதுக்­கப்­பட வேண்டும் என்ற கோரிக்கை முன்­வைக்­கப்­பட்­டது. ஆனால் அதை நிரா­க­ரித்த கூட்­ட­மைப்புத் தலைமை, சுழற்சி முறையில் வழங்க முடிவு செய்­தது.

இப்­போது சுரேஷ் பிரே­மச்­சந்­தி­ர­னுக்கு கட்­சியின் தலைவர் என்ற வகையில் ஆச­னத்தை ஒதுக்­கினால், அது ஆனந்­த­சங்­கரி விட­யத்தில் கூட்­ட­மைப்பு தலை­மையின் முடிவு தவறு என்­றாகி விடும்.

எவ்­வா­றா­யினும், தேசியப் பட்­டியல் ஆச­னத்தை சுழற்­சி­மு­றையில் பகிர்ந்து கொள்ளும் யோசனை ஒன்றும் முன்­வைக்­கப்­பட்ட போதிலும் அதனை கூட்­ட­மைப்பு தலைமை நிரா­க­ரித்­தி­ருக்­கி­றது.

எவ்­வா­றா­யினும், தேசியப் பட்­டியல் ஆச­னங்­களில் ஒன்று பங்­காளிக் கட்­சி­க­ளுக்கு அளிக்­கப்­பட்­டி­ருக்­கலாம் என்ற கருத்து வலு­வா­கவே உள்­ளது. இந்த விட­யத்தில் கூட்­ட­மைப்பில் உள்ள பங்காளிக் கட்சிகளுக்கு தமிழரசுக் கட்சியின் மீது அதிருப்தி உள்ளதை மறுக்க முடியாது.

தமி­ழ­ரசுக் கட்­சியைப் பொறுத்­த­வ­ரையில் மேலா­திக்க மனோ­பா­வத்தில் செயற்­ப­டு­வ­தான ஒரு கருத்து கூட்டமைப்­புக்குள் உள்­ளது. தேர்தல் வெற்றி அவர்­க­ளுக்கு இன்னும் கூடுதல் தலைக்­க­னத்தைக் கொடுத்­தி­ருக்­கலாம்.

ஆனால், கூட்­ட­மைப்பு என்ற வகையில் தான், இந்த தேர்தல் எதிர்­கொள்­ளப்­பட்­டது.

எனவே பங்­காளிக் கட்­சி­க­ளுடன் உற­வு­களை சீரான முறையில் கொண்டு செல்ல வேண்­டி­யது முக்­கி­ய­மான விடயம்.

அதே­வேளை, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தனது தேசியப் பட்­டி­யலில் ஏற்­க­னவே இடம்­பெற்­றி­ருந்­த­வர்­களைத் தெரிவு செய்தால் இந்­த­ள­வுக்கு சிக்கல் ஏற்­பட்­டி­ருக்­காது. ஆனால் அதனை ஒரு டம்­மி­யாக வைத்துக் கொண்டு தோல்­வி­யுற்­ற­வர்­களை பாரா­ளு­மன்றம் அனுப்ப முற்­பட்­டது தான் சிக்­க­லாக உரு­வெ­டுத்­துள்­ளது.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தேசியப் பட்­டியல் ஆச­னங்­களை மக்­களால் நிரா­க­ரிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு வழங்­கு­வ­தில்லை என்ற புதிய கொள்கை ஒன்றை வரைந்து கொள்­வது நல்­லது.

அது கட்­சிக்கும் நல்ல பெயரைக் கொடுக்கும், தோல்வியுற்ற வேட்பாளர் களின் நெருக்கடிகளில் இருந்தும் பாது காப்புக் கொடுக்கும்.

விடுதலை புலிகளுக்கு அமெரிக்காவில் ஏவுகணை வாங்க, FBIயின் வலையில் விழுந்த கதை

Share.
Leave A Reply

Exit mobile version