பிரபலங்கள் மீது கொண்ட வெறித்தனமான அன்பினாலும், தீவிர ரசிகன் என்ற பெயரினாலும் அவர்கள் பெயரை அடைமொழியாய் வைத்துக்கொள்வது, பச்சைக்குத்திக் கொள்வது, மற்றும் அவர்கள் புகைப்படம் பதித்த உடை, தொப்பி, கைகடிகாரம் என பலவற்றை பயன்படுத்துவர்.
இன்னும் கொஞ்சம் வசதி உடையவர்கள் அவர்களது பொருட்களை ஏலம்விடும் போது அதை அதிக விலைக்கொடுத்து வாங்கி பொக்கிஷம் போல வைத்துக்கொள்வார்கள். இது உலக அளவில் நாம் பெரும்பாலும் கண்டறிந்த விஷயங்கள் தான்.
ஆனால், பிரபலங்களின் இறந்த உடலை, புதைத்த இடத்தில் இருந்து திருடி சென்றவர்களை பற்றி நீங்கள் கேள்விப்பட்டதுண்டா….01-1438410457-1eightshockingstoriesofgraverobberies
சார்லி சாப்ளின்
சார்லி சாப்ளின் இறந்த பிறகு, பணத்திற்காக அவரது உடல் திருடி செல்லப்பட்டது. திருடி சென்றவர்கள் அவரது உடலை மீண்டும் தர $600,00 கேட்டனர். பிறகு 11 வாரங்கள் கழித்து காவலர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.
சார்லி சாப்ளின்
அதன் பிறகு அவரது வீட்டார்கள் ஆறடிக்கு கீழே புதைத்து அதன் மேல் கான்க்ரீட் பயன்படுத்தி யாரும் திருட முடியாத அளவிற்கு பாதுகாப்பு செய்தனர்.
ஊமைப்பட இயக்குனர் எப்.டபிள்யூ. முர்ணவ்
ஜெர்மனியை சேர்ந்த ஊமைப்பட இயக்குனர் எப்.டபிள்யூ. முர்ணவ் என்பவரின் கல்லறையில் இருந்த புதைத்த உடலின் தலையை மட்டும் திருடி சென்றுள்ளனர். இவரது உடல் ஜெர்மனியில் இருக்கும் பாட்ஸ்டாம் எனும் பகுதியில் புதைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆபிரகாம் லிங்கன்
அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கனின் உடலை, ஓர் திறமையற்ற கும்பல் கடந்த 1876 ஆம் ஆண்டு புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து பறித்து செல்ல முயற்சி செய்தது. சரியான பாதுகாப்பு இல்லாததால் இந்த முயற்சி நடைபெற்றது. பிறகு அங்கு பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டனர்.
புதைத்த உடலை திருடும் பிரபல திருடன்
ரஷ்யாவை சேர்ந்த அனட்டோலி மொச்க்வின் எனும் திருடன், 700க்கும் மேற்ப்பட்ட கல்லறைகளில் பிணத்தை திருட முயற்சி செய்துள்ளான். இதில் 150க்கும் மேற்ப்பட்ட பெண்களின் உடலை தோண்டி எடுத்து, அவைகளில் 29 பேருக்கு பிறந்தநாள் உடை உடுத்தி அலங்காரம் செய்துள்ளான்.
நாசி போர் வீரர்களின் உடைகள்
கடந்த 2012 ஆம் ஆண்டு, போரில் மரணமடைந்த நாசி போர் வீரர்களின் உடலை பணத்திற்காக திருடி வந்த தகவல் தெரியவந்தது. இரண்டாம் உலக போரில் 10,000க்கும் மேற்ப்பட்ட போர் வீரர்கள் மரணமடைந்தது குறிப்பிடத்தக்கது.
ஜுவான் பெரோன்
அர்ஜென்டினா நாட்டின் இராணுவ அதிகாரி மற்றும் அரசியல்வாதியான ஜுவான் பெரோன் புதைக்கபப்ட்ட இடத்தில் இருந்து, அவரது கைகள் மாட்டும் திருடப்பட்டது. ஜுவான் பெரோன் அர்ஜென்டினாவின் அதிபராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜுவான் பெரோன்
இவரது கைகள் மட்டுமின்றி, இராணுவ தொப்பி மற்றும் வாளையும் அவர்கள் திருடி சென்றிருந்தனர். திருடிய 13 ஆண்டுகளுக்கு பிறகு ஓர் கடிதத்தின் மூலம் தங்களுக்கு 8 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கொடுத்தால் தான் திருப்பி கொடுப்போம் என்று நிபந்தனை விதித்தனர்.
Share.
Leave A Reply

Exit mobile version