வாடிகன்: போப் பிரான்சிஸ் அமெரிக்காவில் இருக்கும் மூன்று நகரங்களை சேர்ந்தவர்களுடன் வாடிகனில் இருந்தபடியே இணையம் மூலமாக பேசினார். இதன் ஒரு பகுதியாக அவர் சிகாகோவில் உள்ள ஒரு உயர் நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவியருடன் உரையாடினார்.
அப்போது அந்த பள்ளியைச் சேர்ந்த வேலரி ஹெரேரா என்ற மாணவி எழுந்து தான் அரிய தோல் வியாதியால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறி அழுதார்.
இந்த கஷ்ட்டத்தை மறக்க தனது கவனத்தை இசையின் பக்கம் திருப்பியதாக வேலரி கூறினார். இதை கேட்ட போப் வேலரியை தனக்காக ஒரு பாட்டு பாடுமாறு கூறினார். வேலரி தயங்கவே தைரியமாக இருக்க வேண்டும் என்று போப் தெரிவித்தார்.
இதையடுத்து அந்த மாணவி போப் பிரான்சிஸுக்காக ஸ்பானிஷ் மொழியில் ஒரு பாட்டு பாடினார். பாட்டை கேட்ட போப் புன்னகையுடன் அந்த மாணவிக்கு நன்றி தெரிவித்தார்.
இது பற்றி மாணவி வேலரி கூறுகையில் ” நான் பதட்டமாக இருந்தேன். இதனால் அவருடன் பேசுகையில் அழத்துவங்கிவிட்டேன்” என தெரிவித்தார்.
சவுதி: நண்பன் ஓட்டிவந்த கார் மோதி தூக்கி வீசப்பட்ட பள்ளி மாணவன் – பரபர வீடியோ
சவுதியின் தெற்கேயுள்ள ஜஸான் மாகாணத்தில் நிகழ்ந்த இந்த விபத்தில், அங்குள்ள மேல்நிலைப்பள்ளிக்கு நடந்து செல்லும் அந்த மாணவன் சாலையை கடக்கும்போது, அவ்வழியாக வேகமாக காரை ஓட்டிவரும் அவனது நண்பன் காரை அவன்மீது மோதிவிடுகிறது.
அடிபட்ட வேகத்தில் மாணவன் பல அடி தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டு, சாலையின் மறுபுறம் உள்ள பள்ளத்தில் உருண்டு விழுகிறான்.
காரில் இருந்து அவனது நண்பர்கள் கீழே இறங்கி, அலறியபடி அந்த மாணவனை காப்பாற்ற ஓடி வருவதும் அங்கிருந்த ஒரு கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்த மாணவன் தோள்பட்டையில் ஏற்பட்ட எலும்பு முறிவுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது, குறிப்பிடத்தக்கது. அந்த வீடியோ.., உங்களுக்காக,,