ஆயிரம் வார்த்தைகளால் சொல்ல முடியாத ஒன்றை புகைப்படம் ஒன்று சொல்லி விடும். வியட்னாம் போர், ஆபிரிக்காவின் வறுமை என்பன இதற்கு சான்று. இந்நிலையில் பார்ப்பவர்களின் மனதை நிலைகுலைய வைக்கும் வகையில் புகைப்படம் ஒன்று வெளியாகி உலக மக்களை துயருற வைத்துள்ளது.

சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு போர் காரணமாக ஐரோப்பாவிற்கு அகதியாக செல்ல முயன்ற போது, படகு விபத்துகுள்ளாகி மத்தியதரைகடலில் முழ்கி இறந்து போன குழந்தை ஒன்றின் புகைப்படமே இது.

இந்தப் புகைப்படத்தை பார்க்கும் போது ஒரு கனம் மனம் மௌனிக்கின்றது.

1548சிரியாவில் இடம்பெறும் உள்நாட்டு போர் காரணமாக தமது உயிரை பாதுகாத்து கொள்வதற்காக ஐரோப்பிய நாடுகளுக்கு படகுகள் மூலம் அந் நாட்டு மக்கள் அகதிகளாக செல்கின்றனர்.

எனினும் உயிரை பாதுகாப்பதற்காக உயிரை பணயம் வைத்து வரும் அகதிகளை தங்கள் நாட்டுக்குள் நுழைவதை கடுமையாக ஐரோப்பிய நாடுகளின் எதிர்த்து வருகின்றன. இந்நிலையில் குறித்த குழந்தையின் புகைப்படம் வெளியாகி மனிதாபிமானத்தை கேள்வி குறியாக்கியுள்ளது.

இங்கே பதிப்பிக்கப்பட்டிருக்கும் புகைப்படம் சிலருக்கு மன சஞ்சலத்தை ஏற்படுத்தலாம்.

 

அல்யனின் உடலைத் தூக்கிச்செல்லும் மீட்புப் படை வீரர்.

புதன்கிழமையன்று அதிகாலையில் துருக்கியின் போத்ரும் தீபகற்பத்திலிருந்து கிரேக்கத்தின் கோஸ் தீவை நோக்கி குடியேறிகள் இரண்டு படகுகளில் புறப்பட்டனர்.  இந்தப் படகுகள் சிறிதுநேரத்திலேயே கடலில் மூழ்கியது என துருக்கிய கடலோரக் காவல்படை தெரிவித்துள்ளது.

ஐந்து குழந்தைகள் உட்பட 12 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இரண்டு படகுகளிலும் சேர்த்து 23 பேர் பயணம் செய்தனர். இவர்களில் 9 பேர் மட்டுமே உயிர் பிழைத்திருப்பதாக நம்பப்படுகிறது.

சிவப்பு நிற டி ஷர்ட் அணிந்த அந்தச் சிறுவனின் சடலம் போட்ரம் கடற்கரைப் பகுதியில் ஒதுங்கியிருக்கும் புகைப்படம் உள்ளூர் நேரப்படி 6 மணியளவில் வெளியானது.

Aylan Kurdi, 3, (L) and his brother Galip, 5, who drowned along with their mother

துருக்கிய செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்ட அந்த புகைப்படம் உலகம் முழுவதும் சமூக வலைத்தளங்களில் #KiyiyaVuranInsanlik (கரையொதுங்கிய மனிதத்தன்மை)என்ற ஹாஷ் டாகுடன் வலம்வந்துகொண்டிருக்கிறது.

அந்தச் சிறுவனும் அந்தப் படகுகளில் இருந்த பிற சிரிய நாட்டவர்களும் சரியாவின் கொபேன் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் ஐஎஸ் குழு அந்தப் பகுதியை நோக்கி முன்னேறியதை அடுத்து கடந்த ஆண்டு அவர்கள் துருக்கிக்கு வந்து சேர்ந்தனர் என துருக்கிய செய்தி நிறுவனமான தோகன் தெரிவித்துள்ளது.

புகைப்படத்தில் இருக்கும் மூன்று வயதுச் சிறுவனின் பெயர் அல்யன் (Aylan Kurdi, 3) என்று அறியப்பட்டிருக்கிறது. அல்யன், அவனுடைய ஐந்து வயது சகோதரன் கலிப், அவர்களுடைய தாய் ரிபான் ஆகியோர் கடலில் மூழ்கி உயிரிழந்துவிட்டனர்.

இவர்களுடைய தந்தை அப்துல்லா குர்தி உயிர்பிழைத்துவிட்டார்.

 

Aylan Kurdi, 3, (L) and his brother Galip, 5, who drowned along with their mother

கனடாவில் தஞ்சக் கோரிக்கை நிராகரிப்பு

இந்தப் பயணத்தை மேற்கொள்வதற்கு முன்பாக அவரும் அவருடைய குடும்பத்தினரும் கனடாவில் அகதித் தஞ்சம் கோரினர். ஆனால், அவர்களுடைய கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

அப்துல்லாவின் சகோதரியான டீமா குர்தி கனடாவின் நேஷனல் போஸ்ட் பத்திரிகைக்கு அளித்திருக்கும் பேட்டியில், அவர்கள் மத்திய கிழக்கை விட்டு வெளியேற உதவ முயற்சித்ததாகக் கூறியிருக்கிறார்.

“எங்களால் அவர்களை வெளியே கொண்டுவர முடியவில்லை. அதனால்தான் அவர்கள் படகில் சென்றார்கள்” என்று டீமா குர்தி கூறியிருக்கிறார்.

இந்தக் குடும்பத்தினர் கனடாவில் தஞ்சக் கோரிக்கைக்கு விண்ணப்பித்து, அது நிராகரிக்கப்பட்டதாக கனடாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பின் டொனேலியும் கூறியிருக்கிறார்.

 

“2,600 குடியேறிகள் உயிரிழப்பு”

உலகம் முழுவதும் இந்தப் புகைப்படங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும், ஐரோப்பியத் தலைவர்கள் இது குறித்து எதையும் தெரிவிக்கவில்லை.

இந்த ஆண்டு ஜனவரியில் இருந்து 3,50,000 குடியேறிகள் ஐரோப்பாவை நோக்கி பயணத்தை மேற்கொண்டிருக்கின்றனர் என குடியேறிகளுக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.

இதே காலகட்டத்தில் மத்திய தரைக்கடல் பகுதியை கடக்க முயன்றதில் 2,600 குடியேறிகள் உயிரிழந்திருப்பதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

2015ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் மட்டும் ஏகியென் கடற்பகுதியில் இருந்து 42 ஆயிரம் குடியேறிகளை துருக்கிய கடலோரக் காவல்படை மீட்டிருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. கடந்த வாரத்தில் மட்டும் 2,160 பேர் மீட்கப்பட்டுள்ளனர் எனவும் கூறப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version