எதிர்க் கட்சித் தலைவராக இரா. சம்பந்தன் நியமிக்கப்பட்டமை பாராளுமன்றத்தில் பல்வேறு சலசலப்புக்களை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் விமல் வீரவன்ச மற்றும் பிரதமர் ரணில் இடையே இது தொடர்பில் சொற்போர் மூண்டது.

காணொளியை பார்க்கவும்..

 

“உட்காருங்கள் ‘ஐ சே’ ” : இது ரணில் சபையில் சொன்னது ..

சம்பந்தன் நியமனம்: சபையில் குழப்பம்: குரங்கை போன்று நாடகமாடாதே : பிரதமர் அதிரடி பதில்
vimal
குரங்கை போன்று நாடகமாட வேண்டாம். முன்னைய பாராளுமன்றத்தை போன்று தற்போதைய பாராளுமன்றத்தை முன்னெடுத்துச் செல்ல முடியாது என பிரதமர் ரணில் விக்கிரம சிங்க சபையில் தெரிவித்தார்.

எதிர்க் கட்சித் தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை சபாநாயகர் கரு ஜயசூரிய நியமித்தார்.

இதனையடுத்து பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச சபையில் எழுந்து “ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் எம்.பி. குமார வெல்கமவை எதிர்க் கட்சித் தலைவராக நியமிக்க வேண்டும் என 56 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கோரிக்கை கடிதம் பாராளுமன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்டது.

எனினும் எந்த அடிப்படையில் சம்பந்தன் எதிர்க் கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டார்?” என கேள்வியெழுப்பினார்.

இதற்கு பதிலளித்த சபாநாயகர் கருஜயசூரிய ‘இதுவரை மன்றுக்கு கடிதம் கிடைக்கவில்லை’ என்றார்.

இதன்போது சபையில் கூக்குரல் எழுந்த போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ‘ எதிர்க் கட்சித் தலைவர் தொடர்பான தீர்மானத்தை சபாநாயகர் அறிவித்து விட்டார்.

இது தொடர்பில் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. யாரும் குரங்கு போன்று நாடகமாட முடியாது. இப்போதைய பாராளுமன்றத்தை முன்னைய பாராளுமன்றம் போல் முன்னெடுத்து செல்ல முடியாது என்றார்.

பதவியை ஏற்றுக்கொள்வதாக சம்பந்தன் சபையில் தெரிவிப்பு

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தானும் தனது கட்சியும் ஏற்றுக்கொள்வதாக ஆர். சம்பந்தன் சற்று முன்னர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

சபாநாயகர் மற்றும் தமக்கு வாக்களித்த மக்களுக்கும் அவர் இதன்போது நன்றி தெரிவித்தார். மேலும் நாட்டு மக்களுக்கு  விசுவாசமாக நடந்துகொள்ளும் அதேவேளையில், தமிழரின் தேசிய பிரச்சினைக்கும் தீர்வு காண்பது தமது கடமையென அவர் சுட்டிக்காட்டினார்.

இதற்காகவே மக்கள் தம்மை பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் , பாராளுமன்றத்தின் ஒத்துழைப்புடன் தீர்வைக் காண எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Share.
Leave A Reply

Exit mobile version