சீனாவில் கைகளை இழந்த நபர் ஒருவர் தனது தாயை பொறுப்­புடன் கவ­னித்து வரு­வது நெகிழ்ச்­சியை ஏற்படுத்தி­யுள்­ளது.

சீனாவின் சாங்க்காங் நக­ரத்­திற்கு அருகில் உள்ள டோங்க்சின் கிரா­மத்தை சேர்ந்­தவர் சென் க்சிங்யின்(48).

வீட்டில் ஆறா­வது பிள்­ளை­யாக பிறந்த இவர் தனது ஏழு வயதில் மின்­சாரம் தாக்­கி­யதில் இரண்டு கைக­ளையும் இழந்துள்ளார்.

thai-1இரு கைகளை இழந்­த­போதும் தனது அன்­றா­டப்­ப­ணி­களை அவரே கவ­னித்து வரு­கிறார், மேலும் தங்­க­ளது குடும்­பத்­தொ­ழி­லான விவ­சாயம் மற்றும் ஆடு மாடு­களை மேய்க்கும் பணி­க­ளையும் மேற்­கொண்டு வரு­கிறார்.

இதில் நெகிழ்ச்­சி­யூட்டும் விட­ய­மாக, மூச்­சுக்­குழாய் அழற்­சியால் பாதிக்­கப்­பட்டு படுத்த படுக்­கையாய் இருக்கும் தனது 88 வயது தாயையும் கவ­னித்து வரு­கிறார்.

அன்­றாடம் உண­வு­களை தயா­ரித்து, அதனை தனது வாயில் பற்­றி­யி­ருக்கும் கரண்டியால் தாயா­ருக்கு உணவை ஊட்டி வரு­கிறார்.

இவர் இவ்­வாறு தனது தாயை பராமரித்து வருவதை சீன ஊடகங்கள் பாராட்டி செய்தி வெளியிட்டுள்ளன.

வளர்ப்பு மகன் என்ற உண்மை தெரிந்­த­மையால் சிறுவன் தற்­கொலை
04-08-2015

வளர்ப்பு மகன் என்ற உண்மை தெரிந்­த­மையால் 9வயது சிறுவன் ஒருவன் விஷம் அருந்தி தற்­கொலை செய்­து­கொண்ட சம்பவம் கிருஷ்­ண­கி­ரியில் இடம்­பெற்­றுள் ­ளது.

கிருஷ்­ண­கிரி மாவட்டம், தேன்­க­னிக்­கோட்டை வட்டம் அஞ்­செட்­டியைச் சேர்ந்­தவர் பாஸ்கர் (வயது- – 52). அவரது மனைவி சுமா (வயது-–35) இத் தம்­ப­திகளுக்கு நீண்ட நாட்களாக குழந்தை இல்­லா­ததால், கர்­நா­டக மாநிலம், பெங்­க­ளூரில் உள்ள அவர்­களின் உற­வினர் ஒரு­வ­ரது பவன் என்ற ஆண் குழந்­தையை தத்­தெ­டுத்து வளர்த்து வந்­தனர்.

சிறு வய­தி­லி­ருந்தே இவர்­க­ளிடம் வளர்­வதால், பவ­னுக்கு தான் வளர்ப்பு மகன் என்­பது இது­வரை தெரி­ய­வில்லை. இந்­நி­லையில், தன்­னுடன் படிக்கும் மாண­வர்கள் மூலம், தன்னை வளர்த்து வரு­வது வளர்ப்புப் பெற்றோர் என பவ­னுக்குத் தெரிய வந்­ததால், மன­வே­தனை அடைந்த பவன், வீட்டில் யாரும் இல்­லாத நேரத்தில் விஷம் அருந்­தியுள்ளார்.

இத­னை­ய­டுத்து, வீட்டில் மயங்­கிய நிலையில் கிடந்த பவனை மீட்ட அவ­ரது வளர்ப்புப் பெற்றோர், மருத்­து­வ­ம­னைக்குக் கொண்டுசெல்­கையில், வழியில் பவன் உயி­ரி­ழந்துள்ளார். இதுகுறித்து, அஞ்செட்டி பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் பார்வையிட..
https://www.facebook.com/ilakkiyainfo

Share.
Leave A Reply

Exit mobile version