நுவரெலியா – மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மவுஸ்ஸாக்கலை நீர்தேக்கத்தில் யுவதி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
இன்று காலை 8.30 மணியளவில் குறித்த யுவதி குளிப்பதற்காக நீர்தேக்கத்திற்கு சென்றுள்ளார்.
குளித்துக்கொண்டிருக்கும் போது தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.
இவ்வாறு உயிரிழந்த யுவதி மஸ்கெலியா அப்கட் பிரதான வீதியில் அம்மன் கோவிலுக்கு அருகாமையில் உள்ள பிரதேசத்தைச் சேர்ந்த ரத்னவேல் ஞானேஸ்வரி (29 வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சடலம் மஸ்கெலியா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.