மூதூர், ஜின்னா நகரில் இன்று (08) அதிகாலை ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலை செய்ப்பட்டவர் மூதூர், ஜின்ன நகர் – 59 ஆவது கட்டையைச் சேர்ந்த அப்துல் காதர் இக்ராம் எனும் 25 வயது நபர் ஆவார்.
குறித்த நபர் தூக்கத்திலிருந்த வேளையில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தெரியவருவதாவது, குறித்த இளைஞன் திருமண நிகழ்வொன்றிற்கு சென்று வீடு திரும்பியுள்ளார். இரவு வேளையில் ஏற்பட்ட அதிக உஷ்ணம் காரணமாக வீட்டின் கதவை திறந்துவைத்தவாறு தூங்கியுள்ளார்.
 2_0
இதன் காரணமாக கொலையாளி மிக இலகுவாக, தலையில் வெடிவைத்து அவரை கொன்றுள்ளார்.
 
அவரது உடல், பிரேதப் பரிசோதனைக்காக தற்போது திருகோணமலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் மது போதையில் கத்தியால் குத்தி குடும்பஸ்தர் கொலை
07-09-2015

மட்டக்களப்பு — ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிவேம்பு பகுதியில் மதுபோதையில் கத்தியால் குத்தி குடும்பஸ்தர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

மேலும் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் தப்பியோடியுள்ளார். இச் சம்பவம் ஞாயிறு இரவு 09.30 அளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிரம்புக்கூடை விற்பனை செய்யும் இருவருக்கிடையில் ஏற்பட்ட முறுகல் நிலையின்போது ஒருவர் மற்றவரை கத்தியால் குத்தியுள்ளதாக தெரியவருகிறது. கடுமையாக காயமடைந்த நபர் மாவடிவேம்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் செங்கலடி மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும் போது மரணமானதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை சம்பவத்தில் பலியானவர் 36 வயதுடைய கோணேஸ்வரன் ரமேஸ்குமார் என தெரியவந்துள்ளது.

ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் சந்தேகநபரையும் தேடி வருகின்றனர். சடலம் செங்கலடி மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் பற்றிய மேலதிக தகவல்கள்..

தனது ஒன்றுவிட்ட சகோதரனை தகராறு காரணமாக அடித்தும் வெட்டியும் கொலை செய்தார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தேடப்பட்டு வந்தவர்  திங்கட்கிழமை காலை கைதுசெய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

பணக் கொடுக்கல், வாங்கலில் ஏற்பட்ட தகராறு காரணமாக ஒன்றுவிட்ட சகோதரர்களுக்கிடையில் ஏற்பட்ட  கைகலப்பில் ஒருவர் அடித்தும் வெட்டியும் கொல்லப்பட்ட சம்பவம், ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  மாவெடிவேம்பு கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை (06) இரவு இடம்பெற்றுள்ளது.

மாவெடிவேம்பு -1, எல்லை வீதியை சேர்ந்த கோணேஸ் ரமேஸ்குமார் (வயது 36) என்பவரே  இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து தலைமறைவான சந்தேக நபரை புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

பணக் கொடுக்கல், வாங்கலில் நீண்ட நாட்களாக காணப்பட்ட தகராறு வாய்த்தர்க்கமாக ஏற்பட்டு அது கைகலப்பாக மாறி கொலையில் முடிந்துள்ளதாக உறவினர்கள் கூறினர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version