சென்னை: அரவிந்த் சாமியை எனக்கு ரொம்ப பிடிக்கும், அழகான நடிகர் அவரைப் பிடிக்காதவர்கள் என்று யாருமே இருக்க முடியாது என்று கூறியிருக்கிறார் நயன்தாரா.

சமீபத்தில் ஜெயம் ரவி, அரவிந்த் சாமி, நயன்தாரா நடிப்பில் வெளியான தனி ஒருவன் திரைப்படம் தொடர்ந்து வெற்றிநடை போட்டு வருகிறது.

படத்தில் ஜெயம் ரவிக்கு சமமாக நடித்து அசத்திய அரவிந்த் சாமியை ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் படத்தின் நாயகி நயன்தாராவும் தனக்கு அரவிந்த் சாமியை மிகவும் பிடிக்கும் என்று கூறியிருக்கிறார்.

08-1441700586-thanioruvandsd-600

தனி ஒருவன்
சமீபத்தில் வெளியான தனி ஒருவன் திரைப்படம் மாபெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது, தொடர்ந்து ஹவுஸ்புல் காட்சிகளுடன் திரையரங்குகள் நிரம்பி வழிகின்றன என்று தியேட்டர் அதிபர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
அரவிந்த் சாமி
தமிழ் சினிமாவின் மிகவும் அழகான நாயகர்களில் ஒருவரான அரவிந்த் சாமி இந்தப் படத்தில் அதிரடியான வில்லனாக நடித்திருந்தார். இவரின் நடிப்பைப் பார்த்து பலரும் அரவிந்த் சாமியை மனந்திறந்து பாராட்டி வருகின்றனர்.

நயன்தாரா
தனி ஒருவன் மூலம் முதன்முறையாக ஜெயம் ரவியுடன் இணைந்து நடித்திருக்கிறார் நயன்தாரா, இந்தப் படத்தின் மூலம் மீண்டும் நயன்தாராவின் மார்க்கெட் ஏறியிருக்கிறது. இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அரவிந்த் சாமியைப் பிடிக்குமா என்று கேட்டதற்கு அவரை மிகவும் பிடிக்கும் என்று கூறியிருக்கிறார். மேலும் அவருடன் நடித்த அனுபவங்களையும் இங்கே பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

அரவிந்த் சாமியை ரொம்ப பிடிக்கும்

அரவிந்த் சாமியை எனக்கு ரொம்ப பிடிக்கும். அழகான நடிகர். அவரைப் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. நான் ‘தனி ஒருவன்’ படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனபோது ஜெயம் ரவி கதாநாயகன் என்று மட்டும்தான் தெரியும்.

அரவிந்த் சாமியுடன் நான் நடிப்பேனா
இந்த படத்தின் ஷூட்டிங்கிற்கு போன போதுதான், அரவிந்த்சாமி வில்லனாக நடிக்கிறார் என்பது தெரியவந்தது. பொதுவாக படங்களில் கதாநாயகியுடன் வில்லன் நடிக்கும் காட்சிகள் வரும். இந்த படத்திலும் அது போன்ற காட்சி உண்டா என்று டைக்ரடர் ராஜாவிடம் கேட்டேன்.

ஒரு காட்சி மட்டுமே

அதற்கு அவர், ‘ஒரே ஒரு காட்சியில் அவருடன் நீங்கள் நடிக்கிறீர்கள்’ என்றார். இதனால் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். அவருடன் சேர்ந்து நடிக்க மிகவும் ஆர்வமாக இருந்தேன். அரவிந்த் சாமியுடன் சேர்ந்து நடித்த காட்சிகளில் உற்சாகமாக பங்கேற்று நடித்தேன். அவர் ஒரு மிகச்சிறந்த நடிகர்” என்று அரவிந்த் சாமியை புகழ்ந்து தள்ளியிருக்கிறார் நயன்தாரா. ஜெயம் ரவி பத்தி கடைசி வரைக்கும் ஒண்ணுமே சொல்லலையே…

“தனி ஒருவன்” பட வெற்றி விழா மேடையில் அழுத.. ஜெயம் ரவி, ஜெயம் ராஜா- (வீடியோ)

Share.
Leave A Reply

Exit mobile version