அழகு முருகன் நல்லைக் கந்தனின் வருடாந்த மகோற்சவ திருவிழாவின் 21 ஆம் நாளாகிய இன்று தங்கத் தேர் பவனி நடைபெற்றது.

இன்று மாலை இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளை அடுத்து அலங்காரக் கந்தன் வள்ளி தெய்வானை சமேதராய் தங்கத் தேரில் எழுந்தருளி வெளி வீதி உலா வந்தார்.

நல்லூர் முருகனின் தங்கத் தேர் பவனியில் பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தில் சிறப்பிடம் பெறுகின்ற இரதோற்வசம் எதிர்வரும் 11 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

unnamed-412

Share.
Leave A Reply

Exit mobile version