மங்களூர்: கர்நாடகாவில் குறும்பு செய்த மாணவனை ஆசிரியர் அடித்தபோது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் தீயாக பரவியுள்ளது.

கர்நாடக மாநிலம் மங்களூர் அருகே உள்ள வேத பாட சாலையில் ஆசிரியராக வேலை செய்பவர் சோமசுந்தர சாஸ்திரி. வேதம் கற்றுக் கொடுக்கும் அவர் சிறுவன் ஒருவர் வகுப்பறையில் குறும்பு செய்ததால் கோபம் அடைந்தார்.

இதையடுத்து அவர் ஏற்கனவே வலது கையில் மாவுக்கட்டுடன் இருக்கும் சிறுவனின் காதைப் பிடித்து திருகி, இடது கையை முறித்து அவரை அடித்தார். சிறுவன் வலி தாங்க முடியாமல் அலறினார்.
/div>
நீ பிராமணனா, ஷத்ரியனா என அவர் சிறுவனை பார்த்து திரும்பக் திரும்ப கேட்டார். இந்த சம்பவத்தை அங்கிருந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து தலித் சேவா சமிதி தலைவர் சேஷப்பா போலீசில் புகார் அளித்துள்ளார்.
சோமசுந்தர சாஸ்திரி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

கையில் குழந்தையுடன் ஓடிய அகதியின் காலை இடறிவிட்ட பெண் நிருபர்: காட்டுத்தீயாய் பரவும் வீடியோ

hungary_002ஹங்கேரியை சேர்ந்த தொலைக்காட்சி கமெரா பெண் ஒருவர், செர்பிய எல்லையில் அகதி ஒருவரின் காலை இடறிவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஹங்கேரியை சேர்ந்த N1TV என்ற தொலைக்காட்சி நிருபர்கள், செர்பிய எல்லையில் உள்ள Roszke என்ற கிராமத்தில் இருந்த அகதிகளை படம் பிடிக்க சென்றுள்ளனர்.

அந்த கிராமத்தில் holding camp எனப்படும் இடைத்தங்கல் முகாம் அமைத்து அவர்களை தங்கவைத்துள்ளனர்.

பின்னர் அங்கு பொலிசார் வந்தபோது, அந்த முகாமை விட்டு வெளியேறும் ஆர்வத்தில் அனைவரும் தங்கள் குழந்தைகள் மற்றும் உடைமைகளுடன் ஓட்டமெடுத்துள்ளனர்.

இதனை படம்பிடித்துக் கொண்டிருந்த அந்த கமெரா பெண், அங்கு ஓடிய இளம் பெண் ஒருவரது காலை இடறி விடுகிறார்.

இந்த சம்பவம் மற்றொரு கமெராவில் பதிவாகியுள்ளது. மேலும், கைகளில் உடைமைகளுடன் தன் குழந்தையுடன் ஓடும் தந்தை ஒருவரையும் அந்த பெண் இடறிவிடுகிறார்.

இதில் கீழே விழும் அந்த தந்தை தன் கையில் உள்ள குழந்தையுடன் சேர்ந்து நிலை தடுமாறி கீழே விழுகிறார்.

Stephan Richter என்ற நிருபர் அந்த பெண்ணின் செயல்களை தெளிவாக படம்படித்துள்ளார்.

மேலும் அந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். தற்போது இணையத்தில் வேகமாக பரவி வரும் அந்த வீடியோவை பலரும் பார்த்தும் பகிர்ந்தும் வருகின்றனர்.

இந்த விடயம் சர்ச்சையானதை அடுத்து, அந்த பெண்மணி ஹங்கேரி தொலைக்காட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தொலைக்காட்சி நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும், அந்த அறிக்கையில், அந்த பெண்ணின் செயல் முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version