ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வை யின் 30ஆவது கூட்­டத்­தொடர் இன்­றைய தினம் ஆரம்­ப­மா­க­வுள்ள நிலை­யி­லேயே தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் சட்ட வல்­லு­னர்கள் குழு நேற்று முன்­தினம் ஜெனிவா  வருகைதந்துள்ளது.

இக்­கு­ழு­வினர் ஜெனீ­வாவில் ஐக்­கிய நாடுகள் உறுப்பு நாடுகள் உட்­பட பல்­வேறு நாடு­களின் உயர் மட்ட இராஜதந்­தி­ரி­க­ளுடன் விசேட சந்­திப்­புக்­களை நடத்­த­வுள்­ளனர்.

இதன்­போது இலங்கை இடம்­பெற்­ற­தாக கூறப்­படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் மனி­தா­பி­மான சட்ட மீறல்கள் குறித்து விசேட கவனம் செலுத்­த­வுள்­ளனர்.

இது தொடர்பில் ஜெனீவா சென்­றுள்ள தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ.சுமந்­திரன் கருத்து வெளியி­டு­கையில்,

தமிழர் நீதிக்­கான கூட்­ட­மைப்பின் குரல் ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் சபை அமைந்­துள்ள ஜெனி­வாவில் மட்­டு­மல்ல உலக நாடுகள் எங்கும் ஓங்கி ஒலிக்­க­வுள்­ளது.

ஜெனிவா அமர்வில் வெளியி­டப்­ப­ட­வுள்ள ஐ.நா. விசா­ரணை அறிக்­கையின் பரிந்­து­ரை­களை சர்­வ­தேச சமூகத்தின் ஈடு­பாட்­டுடன் நடை­மு­றைப்­ப­டுத்­த­வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் சார்பில் வலியுறுத்­தப்­ப­ட­வுள்­ளது.

ஐ.நா. விசா­ரணை அறிக்­கையின் பிரதி இலங்கை அர­சாங்­கத்­திடம் தற்­போது கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது. இந்த அறிக்கை எதிர்­வரும் 16ஆம் திகதி ஜெனிவாக் கூட்டத் தொடரில் உத்­தி­யோ­க­புர்­வ­மாக வெளியி­டப்­ப­ட­வுள்­ளது.

இந்­நி­லையில், ஐ.நா. விசா­ரணை அறிக்­கையில் உள்­ள­டக்­கப்­பட்­டி­ருக்கும் பரிந்­து­ரை­களை இலங்கை அர­சாங்கம் அமுல்­ப­டுத்­த­வேண்டும். அவ்­வாறு அமுல் படுத்­தப்­படும் சந்­தர்ப்­பத்தில் சர்­வ­தேச சமு­கத்தின் ஈடு­பாட்­டுடன் நடைப்­ப­டுத்­த­வேண்டும் என்ற நிலைப்­பாட்­டிகை கைவி­டப்­போ­வ­தில்லை என்­றார்.

ஐ.நா. விசா­ரணை அறிக்­கையில் உள்ள பரிந்­து­ரை­களை உள்­ளக விசா­ரணைப் பொறி­மு­றை­யு­டாக நிறை­வேற்ற வேண்டும் என்ற இறுக்­க­மான நிலைப்­பாட்­டில அர­சாங்­கத்தின் சார்­பாக வெளிவி­வ­கார அமைச்சர் மங்­கள சமரவீர தலை­மை­யி­லான உயர் மட்­டக்­கு­ழு­வினர் உள்­ள­தோடு அதனை நியாப்­ப­டுத்தும் வகையில் பல்­வேறு தரப்­பி­னரைச் சந்­தித்து தமது செயற்­பா­டுகள் குறித்து விளக்­க­ம­ளிக்­க­வுள்­னது.

இதே­வேளை ஜெனீவா வருகை தந்துள்ள  தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்­திரன், கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்­தனின் கடி­த­மொன்­றையும் பெற்­றுக்­கொண்டு  வந்ததாக  தெரிய வரு­கின்­றது.

இக்­க­டி­தத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணைப் பொறிமுறை அமைக்கப்பட வேண்டும் என்பதில் தமிழ் மக்கள் உறுதியாக உள்ளனர் எனபதை வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும், தமி­ழ­ரசுக் கட்­சியின் வெளிவிவகாரங்­க­ளுக்­கான செய­லா­ளரும் கூட்­ட­மைப்பின்  ஊட­கப்­பேச்­சா­ளரும் சிரேஷ்ட சட்­டத்­த­ர­ணி­யு­மான எம்.ஏ.சுமந்திரன்  ஜெனீவாவில்  உள்ள  மனிதவுரிமை பேரவை வளாகத்தில் வைத்து  அளித்த செவ்வி…

Share.
Leave A Reply

Exit mobile version