நாசிக்: கோதாவரி ஆற்றுக்குள் குதித்து தற்கொலைக்கு முயன்றவரை, தன் உயிரை துச்சமாக மதித்து ஆற்றுக்குள் குதித்து தற்கொலைக்கு முயன்றவரை காப்பாற்றி இருக்கிறார் ஒரு வீர காவலர்.

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் கும்ப மேளா விழா நடப்பது வழக்கம். அதன்படி தற்போது அங்கு கும்ப மேளா விழா நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கும்ப மேளாவின் 2வது அரச புனித நீராடல் நிகழ்ச்சி நேற்று முன்தினம் கோலாகலமாக நடைபெற்றது. இதையொட்டி, சாதுக்கள் உட்பட லட்சக்கணக்கான பக்தர்கள் கோதாவரி ஆற்றில் புனித நீராடினர்.

அப்போது, கோதாவரி ஆற்றுக்கு மேலிருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் திடீரென தற்கொலை செய்துகொள்ள முயன்று ஆற்றிற்குள் குதித்துள்ளார்.

அந்த நேரத்தில், ஆற்றுக்குள் குதித்தவரின் அருகில், பாதுகாப்பு பணிக்காக நின்று கொண்டிருந்த ஒரு காவலர் யாரும் எதிர்பார்க்காத நிலையில், சற்றும் யோசிக்காமல் தன் உயிரை துச்சமென மதித்து, ஆற்றிற்குள் குதித்து அந்த நபரின் உயிரைக் காப்பாற்றினார்.

காவலரின் இந்த வீரச்செயல், தற்போது புகைப்படமாகவும், வீடியோவமாகவும் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

இந்த காட்சிகளை கண்ட அனைவரும் அந்த காவலரின் வீரச்செயலை பெரிதும் பாராட்டி வருகின்றனர்.

>

ஒட்டகம் மேய்க்க வைத்து விட்டார்கள்… ஒரு தமிழரின் குமுறல்! (வீடியோ)

idianaதேனி மாவட்டம், கம்பம் கோம்பை சாலையை சேர்ந்த இமாம்ஷா மகன் சதாம் உசேன் (25). குவைத்தில் டிரைவர் வேலைக்கு கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி சென்றுள்ளார்.

இதற்காக கும்பகோணம் சோலைபுரத்தைச் சேர்ந்த காஜாமைதீன் என்பவரிடம் ரூ.1 லட்சம் கொடுத்துள்ளார். டிரைவர் வேலைக்காக அழைத்துச் செல்லப்பட்ட சதாம் உசேன் அங்கு 65 ஒட்டகங்களை மேய்க்கும் பணியை செய்யுமாறு துன்புறுத்தப்பட்டார்.

அந்த வேலையை செய்ய மறுத்ததால் அவருக்கு 2 நாட்கள் உணவு மறுக்கப்பட்டது. தனது நிலை குறித்து சதாம் உசேன் நண்பர்களுக்கு வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்தார். இது வைரலாக பரவி வருகிறது.

இது குறித்து சதாம் உசேனின் மனைவி யாஸ்லின் பானுவிற்கு தெரிய வரவே அதிர்ச்சியடைந்தார். தேனி மாவட்ட கலெக்டர் வெங்கடாசலத்திடம் தனது கணவரை மீட்டு தரும்படி புகார் அளித்தார்.

மேலும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் மகேசிடமும் புகார் அளித்துள்ளார். அதில், குவைத்தில் கொத்தடிமையாக உள்ள தனது கணவரை மீட்டுத் தர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த புகாரைத் தொடர்ந்து இன்னும் ஓரிரு நாட்களில் சதாம் உசேனை இந்தியாவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் உறுதியளித்துள்ளது.

 

Share.
Leave A Reply

Exit mobile version