சிம்பா, ஏழு வயதே ஆனா பிரெஞ்சு புல்டோக் வகையான நாய். இந்நாயின் உயிரை காப்பாற்றுவதற்காய் விமானம் ஒன்றை தரை இறக்கிய சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது.
AIR CANADA விற்கு சொந்தமான குறித்த விமானம் டெல் அவிவிலிருந்து டொரோண்டோ நோக்கி பயணிக்கையில் இந்த செல்ல நாய் குட்டி பொதிகள் கொண்டு செல்லும் களஞ்சிய அறையில் வைத்து எடுத்து செல்லப்பட்டது.
அவ்வேளை குறித்த களஞ்சிய அறையின் வெப்ப அளவு உரை நிலைக்கு சென்றதையடுத்து நாயின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விடுமோ என எண்ணிய விமானி குறித்த விமானத்தை பிரான்க்போர்ட் விமான நிலையத்தில் தரையிறக்கியுள்ளார்.
விமானியின் இந்நடவடிக்கையால் AIR CANADA விற்கு தரிப்பு கட்டணமாக 10000 டொலர் வரையிலான நட்டமும் மேலதிக எரிபொருள் செலவும் ஏற்பட்டுள்ளது.
…அதே வேளை குறித்த நாயினை வேறு ஒரு விமானத்திற்கு மாற்றி ஏற்றும் வரை குறித்த விமானத்தில் பயணித்த பயணிகள் 75 நிமிடங்கள் வரை காத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது
நாயெல்லாம் ப்ளைட்டில போகுது …என்ன வாழ்க்கை சார் .