தென்ன அமெரிக்காவிலுள்ள சிலியில் வலுவான பூகம்பம் ஏற்பட அந்நாட்டின் சில பகுதிகளை நாலரை மீட்டர் வரை உயரமான சுனாமி அலைகள் தக்கிய நிலையில், கடலை ஒட்டி வாழ்பவர்கள் சுமார் பத்து லட்சம் பேர் கரையோரப் பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

பூகம்பத்திலும் சுனாமியிலுமாக குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக இதுவரை தெரியவந்துள்ளது.

8.3 வலுக்கொண்ட நிலநடுக்கம் தலைநகர் சந்தியாகோவுக்கு வட மேற்காக 250 கிலோமீட்டர் தூரத்தில் மையம் கொண்டிருந்தது.

பூகம்பத்தின் பின்னரும் 6 புள்ளிகள் அளவுக்கு வலுவான பல பின் அதிர்வுகள் அப்பகுதியில் ஏற்பட்டுள்ளன.

கொகிம்போ, வல்பரைஸோ போன்ற இடங்களில் போன்ற ஊருக்குள்ளே வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதை தொலைக்காட்சிப் படங்கள் காட்டுகின்றன.

வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள், தாழ்வான பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என அதிபர் மிஷெல் பஷெலெட் வலியுறுத்தியுள்ளார்.

>

chili-earthqquake-_3442804k

Share.
Leave A Reply

Exit mobile version