இறதி்க்கட்ட யுத்தத்தின்போது தவறவிட்ட தனது 18வயது மகளை தேடி கண்ணீர்வடிக்கும் ஒரு தாயின் சோகக் கதையிது…
யுத்ததில்….பிள்ளையை, கணவனை, மனைவியை, சகோதர, சகோதரிகளை…. தாய், தந்தையரை, வாழ்க்கையை… தொலைத்தவர்களின் நிலையை பாருங்கள்…!!
“ஐயா.. எங்கள் பிள்ளைகளை மீட்டு கொடுங்கள்” எனக்கேட்டு காணாமல்போனவர்களின் உறவினர்கள் முதலமைச்சரின் கால்களை கட்டிப்பிடித்தவாறு கண்ணீர்மல்க கதறியழுத சம்பவம் இன்று முதலமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்றது.
சர்வதேச விசாரணை பொறிமுறையினை கோரி கிளிநொச்சி நகரில் ஆரம்பமான நடைபயணம் இன்று நிறைவுக்கு வந்த நிலையில், குறித்த நடை பயணத்தில் பங்கெடுத்த காணாமல்போனவர்களின் உறவினர்களை முதலமைச்சர் சந்தித்து பேசியிருந்தார்.
இதன்போதே காணாமல்போனவர்களின் உறவினர்கள் இவ்வாறு கதறியழுதனர்
குறித்த சந்திப்புக்காக முதலமைச்சர் காணாமல்போனவர்களின் உறவுகளை அழைத்த நிலையில், அவரை சந்திக்க வந்த உறவுகள் வாசலிலேயே அழுதவாறு வந்து முதலமைச்சரின் கால்களை பிடித்தவாறு கதறியழுதனர்.
இலங்கையின் ஆட்சியாளர்களும், சர்வதேசமும் அரசியல்வாதிகள் போன்று செயற்படுகின்றன. இதனாலேயே பல பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் உள்ளது.
அண்மையில் அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் நிஷா பிஷ்வாலை சந்தித்த போது அவர்கள் சார்பில் உள்ளக விசாரணைக்கான கோரிக்கை விடுக்கப்பட்டது.
ஆனால் நாம் சர்வதேச கண்காணிப்புடன் அது நடக்கவேண்டும் என கேட்டிருந்தோம் ஆனால் அதற்குப் பதில் கிடைக்கவில்லை. இந்நிலையில். இலங்கை அரசாங்கமும் தமிழ் மக்கள் கொடுத்த வெற்றிக்கு பதிலாக செய்ய முடிந்தவற்றையும் கூட செய்யவில்லை.
மக்களுடைய பிரச்சினைகளை உணர்ந்துள்ளோம். இதனாலேயே இரு தீர்மானங்களை மாகாண சபையில் நிறைவேற்றியுள்ளோம் என கருத்து கூறினார்.
மனைவியை, பிள்ளைகளை, சகோதர, சகோதரிகளை, தாய்,தந்தையரை வெளிநாட்டில் பத்திரமாக, பாதுகாப்பாக வாழ வைத்துக்துக்கொண்டு தமிழர்களின் வாக்குகளை பெற்றுக்கொண்டு இவர்கள் வாழும் வாழ்க்கையை பாருங்கள்..
இதற்காகவா தமிழர்கள் வாக்களித்த இவர்களை தெரிவு செய்து பாராளுமன்றம் அனுப்பினார்கள்?
• காணாமல் போன யாரையாவது ஒருவரை இதுவரை கண்டுபிடித்துக்கொடுத்துள்ளார்களா?
• சிறையில் வாடும் நமது உறவுகளில் யாரையாவது ஒருவரை விடுதலை செய்து கொடுத்துள்ளார்களா?
• 85 ஆயிரம் விதவைகளில் யாராவது ஒருவருக்கு வாழ்க்கை அமைத்துக்கொடுத்துள்ளார்களா?
• தேர்தல் காலத்தில் கூட்டமைபினரால் வெளியிடப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டவற்றில் எதையாவது ஒரு விடயத்தை நடைமுறைபடுத்தியுள்ளார்களா?
எதை செய்தார்கள் என இவாகள் இப்படி ஆட்டம்போடுகிறார்கள்?
“ரணில்-சிறிசேனா” கூட்டு அரசாங்கத்தால் சேர்த்து வைக்கப்பட்ட புதுமண தம்பதிகள் தான் இவாகள்.
சர்வதேச விசாரணையை தமிழர் தரப்பு புறக்கணிக்க வேண்டும் என்பதற்காக ரணில்-சிறிசேனா அரசாங்கத்தால் கொடுக்கப்ட்டதுதான் சம்பந்தனாருக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவியும், செல்வம் அடைக்கலநாதனுக்கு பாராளுமன்றத்தின் குழுக்களின் பிரதித் தலைவர் பதவியுமாகும்.
சாதாரண ஒரு சிறிய பதவி கிடைத்ததற்கே இப்படி சிரிக்கிறாா என்றால்…அமைச்சர் பதவி கிடைத்தால் எப்படி சிரிப்பார் என்பதை கற்பனை பண்ணிப்பாருங்கள்.