தனக்கு திருமணமான 10வது நாளிலேயே, தன் கணவரை பிரிய முடிவெடுத்ததாக தொலைக்காட்சி தொகுப்பாளினி ரம்யா தெரிவித்துள்ளார்.

கணவரை பிரிந்துவிட்டதாகவும், இனி வேலையில் மட்டுமே கவனம் செலுத்தயிருப்பதாகவும் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி ஏற்கனவே ரம்யா தெரிவித்திருந்தார்..

இந்நிலையில் அவர் மீண்டும் அது பற்றி பேசியிருக்கிறார். அதில் “என் விவாகரத்து பற்றி ஏற்கனவே தெரிவித்திருந்தேன்.

என் திருமண வாழ்க்கை முடிந்து போனதற்கு, பலரும் பல காரணங்களை கூறிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறேன்.

ஓ காதல் கண்மணி படத்தில் நான் நடித்ததை என் கணவரும், அவரின் குடும்பத்தாரும் விரும்பவில்லை என்றும், அதுதான் எங்கள் விவாகரத்துக்கு காரணம் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது. அது உண்மை இல்லை.

உண்மையில் எனக்கு திருமணம் ஆன பத்தாவது நாளே என் கணவரை விவாகரத்து செய்ய முடிவெடுத்தேன். காரணத்தை கூற விரும்பவில்லை.

என் திருமணம் சரியான பாதையில் செல்லவில்லை என்பதை உணர்ந்து என் அம்மா வீட்டிற்கு சென்று விட்டேன். பிரச்சனையை தீர்க்க முயன்றும் ஒன்றும் நடக்கவில்லை.

இது காதல் திருமணமாக இருந்திருந்தால், நான் அவரையும், அவர் என்னையும் புரிந்து கொண்டிருப்போம். ஆனால் இது பெற்றோர்கள் நடத்தி வைத்த திருமணம்.

திருமணத்திற்கு முன்பு அவர் லண்டனில் இருந்தார். திருமணத்திற்கு பிறகு நாங்கள் சேர்ந்து வாழத் துவங்கியபோது இது ஒத்து வராது என்று எங்களுக்கு தோன்றியது.

அதனால் நாங்கள் மனதார பேசியே பிரிந்தோம். வேறு ஏதும் காரணமில்லை என்று கூறியிருக்கிறார்.

மேலும், இப்போது சினிமாவில் கவனம் செலுத்தி வருவதாகவும், முழு நேரமும் படத்தில் நடிப்பதிலும் தனக்கு ஆட்சேபனை இல்லை என்று தெரிவித்துள்ளார்.

G.V.Prakash : We know this movie will get an A certificate while shooting itself | Manisha Interview

 

Share.
Leave A Reply

Exit mobile version