நாம் பார்த்ததிலேயே ஆச்சரியமான, உருக்கமான, அழகான மன்னிப்பு கோருதல் இதுவாக தான் இருக்கும் என்று அடித்து கூற முடியும்.
இத்தாலியை சேர்ந்த அந்தோணி என்வரின் செல்ல நாய் எட்டோர. இந்த வீடியோவில் அந்தோணி, எட்டோர செய்த தவறுக்காக பொய்யாக கோவப்பட்டு பேசுகிறார்.
முதல் அவர் கண்களை நேரடியாக பார்க்கும் எட்டோர, அவரின் வருத்தத்தை புரிந்துக்கொண்டு, சோக மயமாகிறது. அதன் பாவனை நான் பெரிய தவறு செய்துவிட்டேன் என்பது போல் உள்ளது.
ஆனால் அந்தோணி, அதை புரிந்து கொள்ளாதது போல் தொடர்ந்து பொய்யாக கோவப்படுகிறார். உடனே அவர் மடியில் ஏறி அமர்ந்துக்கொண்டு சமாதனப்படுத்த முயல்கிறது.
பிறகு ஆச்சரியப்படுத்தும் விதமாக தனது கால்களை துக்கி அவர் தோளின் மீது போடு அவரை அனணத்துக்கொண்டு மன்னிப்பு கேட்கிறது.
எட்டோர என்ன தவறு செய்தது என்று தெரியவில்லை, ஆனால் அது மன்னிப்பு கேட்ட விதத்திற்காவே அதை மன்னித்துவிடலாம். மன்னிப்பீர்களா அந்தோணி?
ஆசை ஆசையாக வாங்கிய போனை உடைத்து நொறுக்கும் படைவீரர்கள்: வைரல் வீடியோ
20-09-2015
நீதா இத வாங்குனியா? விலை ரொம்ப ஜாஸ்தியோ? சரி உடைச்சு நொறுக்கிடு? கூலாக சொல்கிறார் உயரதிகாரி.
அவர் சொன்னபடியே செய்கின்றனர் படைவீரர்கள். ஆம் இதை தவிர தாய்லாந்து கடற்படை பயிற்சி வீரர்களுக்கு வேறு வழியே இல்லை. இது என்ன கொடுமையா இருக்கே!! என்று கொந்தளிக்கிறீர்களா?
அதற்கு அவசியமே இல்லை. எங்கள் சட்டப்படி கடற்படைவீரர்கள் பயிற்சியின் போது மொபைல் போன் பயன்படுத்தக் கூடாது.
மீறி பயன்படுத்தினால் அது ஐபோனாகவே இருந்தாலும், பீஸ் பீஸாக நொறுக்கப்படும் என்பதே தாய்லாந்து கடற்படையிடமிருந்து வரும் பதில்.