கலிங்கப்பட்டி: மு.க.ஸ்டாலின்தான் பேன்ட் சட்டைக்கு மாறினார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் இன்று தனது காஸ்ட்யூமை மாற்றி வித்தியாசமான தோற்றத்தில் காட்சி அளித்தார்.
தமிழக அரசியல்வாதிகளின் அடையாலம் மடிப்பு கலையாத, கசங்காத அந்த வெள்ளை வேட்டி வெள்ளைச் சட்டைதான்.
ஆனால் இப்போது மாடர்ன் அரசியல்வாதிகளாகவும் நம்மவர்கள் அடிக்கடி கெட்டப்பை மாற்றிக் கொள்கிறார்கள்.
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கிய நமக்கு நாமே பயணத்தின்போது பேன்ட் சட்டை போட்டு இன் செய்து கூலிங் கிளாஸ் போட்டு அசத்தினார். ஆட்டோவில் புட்போர்ட் பயணமும் செய்து கலக்கினார்.

வைகோவும் மாற்றம் இந்த நிலையில் இன்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் டிரஸ்ஸிலும் ஒரு மாற்றத்தைக் காண முடிந்தது.
கருப்பு எங்கே?
அவ்வப்போது கெட்டப்பை மாற்றுபவர்தான் வைகோ. ஆனால் வைகோ என்றாலே அடையாளம் அந்த பெரிய கருப்புத் துண்டுதான். ஆனால் கலிங்கப்பட்டிக்கு வந்த வைகோ கருப்புத் துணைட போட்டு விட்டு பட்டுத் துண்டு போட்டிருந்தது கண்ணைக் கவருவதாக இருந்தது.

பட்டுத் துண்டுடன்
பட்டுத் துண்டு போட்டு, முழுக்கைச் சட்டை வெள்ளை வேட்டியில் சும்மா மாப்பிள்ளை போல ஜம்மென்று காணப்பட்டார் வைகோ

கலைஞர்களுக்கு பொன்னாடை தான் வந்தபோது வாத்தியக் கருவிகளை வாசித்து வரவேற்பு அளித்த கிராமப்புற கலைஞர்களுக்கு பொன்னாடை அணிவித்தும் அவர் கெளரவித்தார்.
அடுத்து யாரெல்லாம் கெட்டப்பை மாத்தப் போறாங்களோ
ஸ்டாலின் மாற்றி விட்டார். வைகோவும் இன்று மாற்றம் கண்டார். அடுத்து எந்தெந்த தலைவர்களெல்லாம் கெட்டப்பை மாற்றிக் கலக்கப் போகிறார்களோ..!