மேற்கு கரையின் , ஹெப்ரொனில் உள்ள சோதனைச்சாவடியொன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஹாதில் அல்- ஹஸ்லமூன் என்ற 18 வயது யுவதியே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
குறித்த பெண் கத்தியால் குத்த முயன்றதாக இஸ்ரேல் படையினர் தெரிவித்துள்ளனர். எனினும் அப்பெண் பையைக் காட்ட மறுத்தமையாலேயே சுடப்பட்டார் என பலஸ்தீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் அவர் பையைக் காட்ட முயன்ற வேளையிலேயே சுடப்பட்ட தாக வேறு சில தகவல்கள் தெரிவிக்கின்றன.அப்பெண் சுடப்படும் முன்னர் எடுக்கப்பட்ட படங்கள் ,
சுடப்பட்டு கீழே விழுந்து கிடக்கும் படங்களும் வெளியாகியுள்ளன.
பாலஸ்தீன கல்லூரி மாணவியை சுட்டுக் கொன்ற இஸ்ரேல் படையினர்: மோதல் மூண்டது
இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் இஸ்ரேல் மேற்கு எல்லை பகுதியில் உள்ள ஹெப்ரானில் நப்தாலி பிரெங்கெல், கிலாட் ஷார், இயால் பாப்ராக் ஆகிய 3 இளைஞர்கள் ஹமாஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டனர்.
அவர்களை மீட்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் ராணுவம் தீவிரமாக இருந்தது. எனினும், அவர்கள் கொலை செய்யப்பட்ட பின்னர் பிணமாக மீட்கப்பட்டனர்.
இதையடுத்து, இருநாடுகளுக்கு இடையிலும் நிகழ்ந்த குண்டு வீச்சு தாக்குதல் ஐ.நா. சபையின் முயற்சியால் முடிவுக்கு வந்தது.
இதையடுத்து, இஸ்ரேல்-பாலஸ்தீனம் நாடுகளுக்கு இடையில் கடந்த சில மாதங்களாக அமைதி நிலவிவரும் நிலையில் தற்போது மேலும் ஒரு மோதலுக்கு அச்சாரமிடும் வகையில் பாலஸ்தீனத்தை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவியை இஸ்ரேல் ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹெப்ரான் நகரைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவியான ஹாதீல் சாலா அல்-ஹஷ்லமோன்(19) என்பவர், இந்நகரின் சோதனைச் சாவடி அருகே இஸ்ரேல் ராணுவ வீரரை கத்தியால் குத்த முயன்றதால் சுட்டுக்கொல்லப்பட்டார் என இஸ்ரேல் ராணுவப் படையினர் தெரிவித்துள்ளனர்.
நேற்று காலை உள்ளூர் நேரப்படி சுமார் 8.30 மணிக்கு இஸ்ரேல் ராணுவப் படையினரால் துப்பாக்கியால் சுடப்பட்ட நேரத்தில் எடுத்த ஹாதீலின் புகைப்படமும் தற்போது வெளிவந்துள்ளது. துப்பாக்கி குண்டுகள் பாய்ந்ததில், படுகாயமடைந்த ஹாதீல் உடனடியாக அருகாமையிலிருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
எனினும், சில மணி நேரங்களில் ஹாதீல் உயிர் பிரிந்தது. பாலஸ்தீனர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் இந்தச் சம்பவத்தால், இஸ்ரேல் ராணுவத்துக்கும் பாலஸ்தீன மக்களுக்குமிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
பாலஸ்தீனியர்கள், ஹாதீல் குத்த முயன்ற ராணுவ வீரர் எங்கே? எனவும், அவருக்கு காயம்பட்டதாகக் கூறப்படுவதற்கு ஆதாரம் எங்கே? எனவும் கேட்டுப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்பகுதியில், தற்போது இந்தப் பிரச்சனை பெரிதாக வெடிக்கும் அபாயம் உள்ளது.