தன் காதலனுடன் கையடக்கத் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்த பேத்தியை அவரது தாத்தா கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் இந்தியா – கடலூர் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

இந்தியா – கடலூர் மாவட்டம், ஆண்டிப்பாளையத்தைச் சேர்ந்த வீராசாமி என்பவரின் பேத்தி ரமணிதேவி(19). இவர் தன்னுடன் கல்லூரியில் படிக்கும் மருதநாயகம்(24) என்பவரை காதலித்து வந்துள்ளார்.

பெற்றோர் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ரமணிதேவி தன் காதலை விடவில்லை. கையடக்கத் தொலைபேசியில் பேசுவது, வெளியில் சந்தித்து பேசுவதுமாக இருந்தார்.

ஒருமுறை கல்லூரிக்குச் சென்ற ரமணிதேவி வீடு திரும்பவில்லை. கடைசியில் அவர் தன் காதலன் வீட்டிற்குச் சென்று விட்டதாகவும், மருதநாயகத்தின் பெற்றோர்கள் அவர்களது காதலை ஏற்றுக் கொண்டுள்ளதாகலும் ரமணியின் வீட்டாருக்கு தெரிய வந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் ரமணியின் தந்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததன் பின்னர் காதலர்கள் பொலிஸ் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.

பின்னர் பொலிஸார் காதலர்களுக்கு அறிவுரை கூறி பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர். ரமணிதேவியை வீட்டார் அவரை வீட்டில் சிறை வைத்தனர்.

இந்நிலையில், ரமணிதேவி நேற்று காலை தனது அறையில் தன் காதலன் மருதநாயகத்துடன் தொலைபேசியில் பேசிக்கொண்டிருப்பதை அவருடைய தாத்தா கண்டுள்ளார்.

இதை தொடர்ந்து கோபமடைந்த தாத்தா ரமணிதேவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். பொலிஸார் குறித்த நபரை கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version