திருச்சி: சிறையில் இருக்கும் கணவரை பார்க்க விடாததோடு, தகாத வாரத்தைகளால் காவலர்கள் திட்டியதாகக் கூறி சிறைக் கைதியின் மனைவி உண்ணாவிரதம் மேற்கொண்டு வருவது திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புலிகளோடு தொடர்பு கொண்டிருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் இலங்கையைச் சேர்ந்த சந்திரகுமார் என்பவர் 5 ஆண்டுகளுக்கு முன்பு கைது செய்யப்பட்டார்.
jayanandhini 550 1
அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணம் ஆகாத நிலையில், நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டாலும் கூட க்யூ பிரிவு போலீசார் அவரை தொடர்ந்து திருச்சி சிறப்பு முகாமில் அடைத்தனர்.

அவரது விடுதலைக்காக சந்திரகுமார் தரப்பினர் தீவிர சட்டப்போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தன் கணவர் சந்திரகுமாரைக் காண சென்னையில் இருந்து அவரது மனைவி ஜெயநந்தினியும், அவரது குழந்தைகள் பரிதி, பகீரதனும் வந்தனர்.

ஆனால் கணவர் சந்திரகுமாரைக் காண போலீசார் அனுமதிக்காத நிலையில், காவல்துறையினர் தன்னை மோசமான வார்த்தைகளால் பேசியதாகக் கூறி, ஜெயநந்தினி தன் குழந்தைகளோடு சிறப்பு முகாம் வாசலில் உண்ணாவிரதத்தை துவங்கியுள்ளார்.

அதேசமயம் சந்திரகுமாரும், சிறைக்குள் சாகும்வரை உண்ணாவிரதம் துவங்கியுள்ளதால் பரபரப்பு நிலவுகிறது.

ஏற்கனவே சந்திரகுமார் பூந்தமல்லி சிறப்பு முகாமில் அடைபட்டிருந்தபோது கணவரை விடுவிக்கக்கோரி, ஜெயநந்தினி தன் இரு குழந்தைகளுடன் உண்ணாவிரதம் இருந்து, கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version